மற்றொரு கொரோனா அலை உருவாகிறதா? - தினசரி பாதிப்பு 6000ஐ தாண்டியது

 
corona

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில்  6,050 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோன பரவல் அதிகரித்து வருகிறது. நூற்றுக்கணக்கில் பதிவாகி வந்த தினசரி பாதிப்பு கடந்த சில நாட்களாக 4 ஆயிரம், 5 ஆயிரத்தை தாண்டி பதிவாகி வந்தது. கடந்த திங்கள் கிழமை இந்தியாவில் 3823 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. நேற்று  முன் தினம் இந்தியாவில்  4,435 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதேபோல் நேற்று 5,335 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில்,  கடந்த 24 மணி நேரத்தில்  6,050 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 
 
இதன் காரணமாக கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெறுவர்களின் எண்ணிக்கை 28 ஆயிரத்து 303 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் கொரோனாவுக்கு 13 பேர் உயிரிழந்தனர். கேரளா, டெல்லி, மகாராஷ்டிரா, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. நாளுக்கு நாள் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். மற்றொரு கொரோனா அலை உருவாகிறதா? எனவும் மக்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.