இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 7,178 ஆக குறைந்தது

 
Covid

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 7 ஆயிரமாக குறைந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 7,178 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில், இன்று குறைந்துள்ளது. தினசரி கொரோனா பாதிப்பு தொடர்ந்து 10 ஆயிரத்திற்கு மேல் பதிவாகி வந்தது. நேற்று முன் தினம் இந்தியாவில்  12,193 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இந்நிலையில், நேற்று கொரோனா பரவல் குறைந்தது. நேற்று இந்தியாவில் 10,112 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 7,178 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதன் மூலம் நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 48.91 கோடியை தாண்டியுள்ளது. இந்தியாவில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 68 ஆயிரத்தை தாண்டியுள்ளது. டெல்லி, மகாராஷ்டிரா, கேரளா, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் தினசரி பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், அங்கு தடுப்பு நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளது.