இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 9,355 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

 
Covid Positive

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 9,355 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

இந்தியாவில் கடந்த சில வாரங்களாக கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. நூற்றுக்கணக்கில் பதிவாகி வந்த தினசரி கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக 8 ஆயிரம், 9 ஆயிரம் என பதிவாகி வருகிறது. டெல்லி, மகாராஷ்டிரா, கேரளா, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் தினசரி கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், அங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 9,355 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

இதன் காரணமாக நாட்டில் கொரோனா பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 57,410 ஆக குறைந்துள்ளது. கொரோனா பாதிப்பால் மேலும் 26 பேர் பலியாகியுள்ளனர். கொரோனா பாதிப்பால் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 5 லட்சத்து 31 ஆயிரத்து 424 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவது கவலையை ஏற்படுத்தியுள்ளது.