இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 10,000க்கு கீழ் குறைந்தது

 
corona

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 10,000க்கு கீழ் குறைந்துள்ளது. நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 9,531 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

நாட்டில் கொரோனா பரவல் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து அதிகரித்து வந்தது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. நேற்று 11,539 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 9,531 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதேபோல் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 36 பேர் உயிரிழந்த நிலையில்,  உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 5,27,368 ஆக அதிகரித்துள்ளது. 

Corona

இதேபோல் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட  11,726 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை  4,37,23,944 ஆக உயர்ந்துள்ளது. நாட்டில் தற்போது  97,648 பேர் வீடு மற்றும் மருத்துவமனைகளில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒரே நாளில் 2,29,546 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும், இதுவரை மொத்தம் 88,27,25,509 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை செலுத்தப்பட்ட தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கை 209 கோடியை தாண்டியுள்ளது.