இந்தியாவில் 358 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு.. கடந்த 24 மணிநேரத்தில் 122 பேர் பாதிக்கப்பட்டதாக தகவல்...

 
Omicron


உலக நாடுகளை அச்சுறுதி வரும் ஒமைக்ரான் பாதிப்பு இந்தியாவிலும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. டெல்டா வைரஸை விட வேகமாக பரவுமென்று  விஞ்ஞானிகளால் எச்சரிக்கப்பட்ட ஒமைக்ரான், அந்த கூற்றுக்கு ஏற்றார்போல் வேகமாக படையெடுத்து பரவி வருகிறது.  இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 122 ஒமைக்ரான் பாதிப்புகள் பதிவாகியுள்ளன. நாடு முழுவதும் 17 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில்   358 பேருக்கு ஒமைக்ரான் கண்டறியப்பட்டுள்ளது.

ஒமைக்ரான்

இதில் 114 பேர் வெளிநாடுக்களிலிருந்து இந்தியா வந்தவர்கள் என்பது  குறிப்பிடத்தக்கது.  அதிகபட்சமாக மஹாராஷ்டிராவில் 88 பேர் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும்  டெல்லியில் 67 பேருக்கும்,  தெலங்கானாவில் 38 பேருக்கும், தமிழகத்தில் 34 பேருக்கும், கர்நாடகாவில் 31 பேருக்கும், குஜராத்தில் 30 பேருக்கும்  ஒமைக்ரான் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஒமைக்ரான்

இதேபோல், இந்தியாவில் புதிதாக 6,650 பேருக்கு கொரோனா தொற்று பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.  மொத்தமாக 77 ஆயிரத்து 516 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.  அதேபோல் கடந்த 24 மணி நேரத்தில் 374 பேர்  கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். 7 ஆயிரத்து 51 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.   மேலும் கடந்த 57 நாட்களாக இந்தியாவில் கொரோனா தினசரி பாதிப்பு 15 ஆயிரத்திற்கும் கீழ் பதிவாகி வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.