இந்தியாவின் எஸ்-400 கவசத்திற்கு எந்த பாதிப்பும் இல்லை - பாதுகாப்புத்துறை விளக்கம்
May 10, 2025, 13:05 IST1746862526931
பாகிஸ்தானின் ராணுவம் நடத்திய தாக்குதலில் இந்தியாவின் எஸ்-400 கவசம் அழிக்கப்பட்டதாக வதந்தி பரவிய நிலையில், பாதுகாப்பு துறை அதனை மறுத்துள்ளது.
பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு இந்தியா தரப்பில் பதிலடி கொடுத்தது. ஆபரேஷன் சிந்தூர் என்ற தலைப்பில் பதிலடி தாக்குதல் நடத்தப்பட்டது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மற்றும் பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தியது. இந்திய ராணுவம் நடத்திய அதிரடி தாக்குதலில் 100க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இதனையடுத்து பாகிஸ்தான் ராணுவம் இந்திய எல்லைப் பகுதியில் தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. இந்திய ராணுவமும் தக்க பதிலடி கொடுத்து வருகிறது. இதனால் இரு நாடுகளுக்கு இடையே போர் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.
இதனிடையே பாகிஸ்தானின் ராணுவம் நடத்திய தாக்குதலில் இந்தியாவின் எஸ்-400 கவசம் அழிக்கப்பட்டதாக பாகிஸ்தானின் ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வந்தன. இந்த நிலையில், பாகிஸ்தானின் ராணுவம் நடத்திய தாக்குதலில் இந்தியாவின் எஸ்-400 கவசத்திற்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. எஸ்400 அமைப்பு சேதமானதாக கூறப்படுவது ஆதாரமற்றது என தெரிவிக்கப்பட்டுள்ளது.


