பாகிஸ்தானுக்கான சிந்து நதி நீரை நிறுத்திய இந்தியா

 
ச் ச்

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து, ஜம்மு காஷ்மீரில் இருந்து பாகிஸ்தானுக்குச் செல்லும் சிந்து நதி நீரை நிறுத்தியது இந்தியா.


ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் செவ்வாய்க்கிழமை சுற்றுலாப் பயணிகள் மீது தாக்குதல் நடந்தது. இந்த தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய அமைச்சரவைக் குழு கூட்டத்தில் சிந்து நதிநீர் ஒப்பந்தம் தற்காலிக ரத்து உள்ளிட்ட ஐந்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. இந்நிலையில், பாகிஸ்தான் அரசின் அதிகாரபூர்வ எக்ஸ் பக்கம் இந்தியாவில் முடக்கப்பட்டுள்ளது.

மேலும் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து, ஜம்மு காஷ்மீரில் இருந்து பாகிஸ்தானுக்குச் செல்லும் சிந்து நதி நீரை இந்தியா நிறுத்தியது. பாகிஸ்தானின் நீர்ப் பாசன தேவையில் 93% தண்ணீர் சிந்து நதி ஒப்பந்தம் மூலம் கிடைக்கிறது. சிந்து நதி படுகையில்தான் 61 சதவிகித பாகிஸ்தானியர்கள் வாழ்கின்றனர். பாகிஸ்தான் மீது இந்தியா ராஜாங்க ரீதியிலான பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சிந்து நதி நீர் ஒப்பந்தம் என்பது 1960ஆம் ஆண்டு செப்டம்பர் 19ஆம் தேதி அன்று போடப்பட்டது.அப்போதைய இந்தியப் பிரதமர் ஜவஹர்லால் நேரு மற்றும் அப்போதைய பாகிஸ்தான் பீல்ட் மார்ஷல் முகமது அயூப் கான் தலைமையில் இந்த சிந்து நதி நீர் ஒப்பந்தம் கையெழுத்தானது குறிப்பிடதக்கது.