இந்திய ராணுவ வீரரை ஒப்படைத்தது பாகிஸ்தான்!

 
India India

எல்லை தாண்டி சென்றதாக பாகிஸ்தான் ராணுவத்திடம் சிக்கிய இந்திய ராணுவ வீரர், இந்தியாவிடம் மீண்டும் ஒப்படைக்கப்பட்டார். 

காஷ்மீர் அருகே பஹல்காம் பகுதியில் நடந்த தீவிரவாத தாக்குதலுக்கு இந்தியா பதிலடி கொடுத்ததால் இரு நாடுகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்தியா-பாகிஸ்தான் இடையே நடந்த தாக்குதல் போராக மாற இருந்த நிலையில், இருநாடுகளும் சண்டையை நிறுத்தவதாக அறிவித்தன. இந்தியா-பாகிஸ்தான் இடையே நடந்த சண்டையின் போது இந்திய ராணுவ வீரர் பூர்ணம் குமார் ஷா எல்லை தாண்டி சென்றதாக பாகிஸ்தான் ராணுவத்திடம் சிக்கினார். 
இருநாடுகளும் சண்டையை நிறுத்தியதையடுத்து தங்களது ராணுவ வீரரை மீண்டும் ஒப்படைக்க வேண்டும் என இந்தியா வலியுறுத்தியது. இந்திய எல்லை பாதுகாப்பு படை வீரர் பூர்ணம் குமார் ஷா, 20 நாட்களுக்குப் பிறகு இந்திய ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டார்.இந்தியா-பாகிஸ்தான் எல்லை பகுதியான அட்டாரி வழியாக வீரரை பாகிஸ்தான் ஒப்படைத்தது.