பீகார் ரயில் விபத்தில் 4 பேர் பலி - தலா ரூ.10 நிவாரணம் அறிவித்த இந்தியன் ரயில்வே

 
Bihar Train Accident

பீகார் ரயில் விபத்தில் உயிரிழந்த 4 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என இந்தியன் ரயில்வே அறிவித்துள்ளது.

பீகார் மாநிலம் பக்சர் மாவட்டத்தில் உள்ள ரகுநாத்போர் ரயில் நிலையம் அருகே நேற்று இரவு வடகிழக்கு அதிவிரைவு ரயில் 21 பெட்டிகள் தடம் புரண்டன.  டெல்லி ஆனந்த விகாரில் இருந்து அசாம் காமாக்யா நோக்கி சென்ற ரயில் இரவு 9:35 மணி அளவில் ரகுநாத்போர் ரயில் நிலையம் அருகே தடம் புரண்டது. இதில் நான்கு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 50க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இதையடுத்து போலீசார் மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். பாதிக்கப்பட்ட பகுதியில் மீட்பு பணிகள் நிறைவடைந்துள்ளதாகவும் விபத்துக்கான காரணம் குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என்றும், ரயில்வே அமைச்சர் தெரிவித்துள்ளார். பீகார் ரயில் விபத்து காரணமாக அந்த மார்க்கமாக செல்லும் 10க்கும் மேற்பட்ட ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. 

இந்த நிலையில், பீகார் ரயில் விபத்தில் உயிரிழந்த 4 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என இந்தியன் ரயில்வே அறிவித்துள்ளது. இதேபோல் ரயில் விபத்தில் காயமடைந்தவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் பீகார் ரயில் விபத்தில் உயிரிழந்த 4 பேரின் குடும்பங்களுக்கு தலா 4 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் அறிவித்துள்ளது குறிப்பிடதக்கது.