பாகிஸ்தான் தாக்குதலில் இந்திய வீரர் வீர மரணம்

 
dead dead

எல்லையில் பாகிஸ்தானுக்கு எதிரான சண்டையில் இந்திய ராணுவ வீரர் முரளி நாயக் வீர மரணம் அடைந்தார். 

ஜம்மு காஷ்மீர் அருகே பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் தீவிரவாத தாக்குதல் நடத்திய நிலையில்,  இந்தியா தரப்பில் பதிலடி கொடுக்கப்பட்டது. ஆபரேஷன் சிந்தூர் என்ற தலைப்பில் பதிலடி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மற்றும் பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தியது. இந்திய ராணுவம் நடத்திய அதிரடி தாக்குதலில் 100க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இதனையடுத்து பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. இந்திய ராணுவமும் தக்க பதிலடி கொடுத்து வருகிறது.

இந்த நிலையில், எல்லையில் பாகிஸ்தானுக்கு எதிரான சண்டையில் இந்திய ராணுவ வீரர் முரளி நாயக் வீர மரணம் அடைந்தார். காஷ்மீர் எல்லையில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் ராணுவத்திற்கு இடையே கடும் சண்டை நடந்து வருகிறது. இந்த சண்டையில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில் இந்திய ராணுவ வீரர் வீர மரணம் அடைந்தார். மரணமடைந்த முரளி நாயக் ஆந்திராவின் சத்ய சாய் மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது.