"பிரியாணி எங்கள் உயிருக்கு நேர்" - நிமிடத்திற்கு 115 ஆர்டர்... ஸ்விக்கியை தெறிக்கவிட்ட இந்தியர்கள்!

 
பிரியாணி

இந்திய மக்கள் பலரிடம் உங்களின் ஃபேவரைட் உணவு எது என்று யாரை நிறுத்திக் கேட்டாலும், சட்டென யோசிக்காமல் ‘பிரியாணி’ என்றே பதில் வரும். பிரியாணியின் சொந்தக்காரர்களான முகலாயர்களால் நாம் அடிமைப்படுத்தப்பட்டு, பின் அவர்களிடமிருந்து விடுதலை அடைந்திருந்தாலும் கூட, அவர்களின் பிரியாணியோ நம்மை இன்னும் விடுதலை செய்வதாக இல்லை. அது மேலும் மேலும் நம்மை சிறைப்பிடித்துக்கொண்டு, அடிமையாக வைத்துள்ளது. பெண்களின் கூந்தலுக்கு மட்டுமல்ல, பிரியாணிக்கும் ஒரு மணம் உண்டு. 

Hearty briyani cooked in bamboo | The Star

எங்கு சென்றாலும் மணத்தால் கட்டியிழுக்கும் வல்லமை பிரியாணிக்கு மட்டுமே உண்டு என்று சொன்னால் எவராலும் மறுக்க முடியாது, ஏனென்றால் நமது நாக்கு பிரியாணியின் சுவைக்கு அடிமை. இதை எப்படி உறுதியாக சொல்கிறீர்கள் என நீங்கள் கேட்கலாம். ஒவ்வொரு வருடமும் ஸ்விக்கி மூலம் ஆர்டர் செய்யப்படும் உணவில் முதலிடம் பிடிப்பது பிரியாணி மட்டுமே. தொடர்ந்து ஆறாம் ஆண்டாக பிரியாணி முதலிடம் பிடித்து சாதனை பெற்றுள்ளது. இதில் ஆச்சரியப்பட எதுவுமில்லை. பிற்காலங்களில் பிரியாணியை தேசிய உணவாக கூட அறிவிக்கலாம்.

Buhari Briyani | Home delivery | Order online | Periyapatti Thillaipuram  Namakkal

ஸ்விக்கி நிறுவனம் Swiggy's sixth StatEATstics என்ற பெயரில் இந்தாண்டு முழுவதும் ஆர்டர் செய்யப்பட்ட உணவுகளின் விவரங்களை வெளியிட்டுள்ளது. அந்த வகையில் 2021ஆம் ஆண்டில் இந்தியா முழுவதும் 6 கோடியே 4 லட்சத்து 44 ஆயிரம் சிக்கன் பிரியாணிகள் ஆர்டர் செய்யப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு நிமிடத்திற்கு 90 பிரியாணிகள் ஆர்டராகியிருந்தது. இந்தாண்டோ 115 பிரியாணிகள் ஆர்டர் செய்யப்பட்டிருக்கின்றன. பழைய வாடிக்கையாளர்களை விட புதிய வாடிக்கையாளர்கள் விரும்பும் உணவாக பிரியாணி இருக்கிறது.

Riders For Indian Food Delivery Firm Swiggy Return To Chennai After Pay  Strikes 

குறிப்பாக சிக்கன் பிரியாணியை விட 4.3 மடங்கு குறைவாகவே வெஜ் பிரியாணி ஆர்டர் செய்யப்பட்டிருக்கிறது. கொல்கத்தா, சென்னை, ஹைதராபாத், லக்னோ ஆகிய நகரங்களில் சிக்கன் பிரியாணி தான் டாப்பில் இருக்கிறது. மும்பையில் தால் கிச்சடியும் ஜெய்பூரில் தால் ஃப்ரையும் பிரியாணியை ஓரங்கட்டியுள்ளன. பெங்களூரில் மசாலா தோசை டெல்லியில் தால் மாக்கானி பிரியாணியை விட அதிகளவில் விற்பனையாகியுள்ளன. பிரியாணிக்கு அடுத்தப்படியாக ஸ்னாக்ஸ் எனும் சிற்றுண்டிகளில் முதலிடம் வகிப்பது சமோசா.

Quick Vegetable Samosa - Recipes are Simple

ருசியான சட்னியுடன் பரிமாறப்படும் சூடான சமோசாவின் அழகை இந்தியர்களால் ஒருபோதும் மறக்க முடியாது. அதனால்தான் 2021ஆம் ஆண்டில் ஸ்விக்கியில் சமோசா 50 லட்சம் முறை ஆர்டர் செய்யப்பட்டது. சிக்கன் விங்ஸை விட 6 மடங்கு அதிகமாக ஆர்டர் செய்யப்பட்டுள்ளது. அதேபோல அதிகம் விரும்பப்பட்ட சிற்றுண்டிகளில் பாவ் பாஜி இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. இனிப்பு ஐட்டங்களில் குலாப் ஜாமூன் முதலிடம் பிடித்துள்ளது. 21 லட்சம் முறை ஆர்டர் செய்யப்பட்டுள்ளது. 12.7 லட்சம் முறை ஆர்டர் செய்யப்பட்ட ரசமலாய் இரண்டாமிடத்தில் உள்ளது.

Gulab jamun - Wikipedia

முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு ஆரோக்கியமான உணவை ஆர்டர் செய்வதில் இந்தியா முன்னேறியிருக்கிறது. உணவு ஆர்டர்கள் 23% அதிகரித்தது மற்றும் சைவ உணவு மற்றும் தாவர அடிப்படையிலான உணவு ஆர்டர்கள் 83% உயர்ந்தன. கீட்டோ டயட் உணவு ஆர்டர்கள் 23 சதவீதம் அதிகரித்துள்ளது. சைவ உணவு மற்றும் தாவர அடிப்படையிலான உணவு ஆர்டர்கள் 83 சதவீதம் உயர்ந்துள்ளன. அதிகளவில் ஆரோக்கியமான உணவை ஆர்டர் செய்யும் சிட்டிகளில் பெங்களூருவுக்கு முதலிடம். ஹைதரபாத், மும்பை சிட்டிகள் அடுத்தடுத்த இடங்களில் இருக்கின்றன.