இந்திரா காந்தி 37 ஆவது நினைவு நாள் : ராகுல் காந்தி அஞ்சலி!

 
indira

உலக வரலாற்றில் ஒவ்வொரு நாட்டின் வரலாற்றிலும் சில பக்கங்கள் மறக்கமுடியாதவை ஆக இடம்பெறும் . அப்படி இந்திய வரலாற்றில் பிரதமராக இருந்த இந்திரா காந்தி அவருடைய பாதுகாவலர்களால் அவரது இல்லத்திலேயே சுட்டுக்கொல்லப்பட்டது இன்றளவும் மறக்க முடியாத  ஒன்றாக மாறியுள்ளது.

ttn

மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் 37 ஆவது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இந்தியாவின் முதல் பிரதமரான இந்திரா காந்தி கடந்த 1984ஆம் ஆண்டு அக்டோபர் 31ஆம் தேதி தனது 3 பாதுகாவலர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.  வயிற்றிலும் மார்பிலும் மொத்தம் 16 குண்டுகள் இந்திராவின் மீது பாய்ந்தது. இதையடுத்து உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவருக்கு அறுவை சிகிச்சை மூலம் குண்டுகள் அகற்றப்பட்டாலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து அவரது உடல் டெல்லி சக்தி ஸ்டால் பகுதியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

ttn

இந்நிலையில் இந்திரா காந்தியின் 37 ஆவது நினைவு தினத்தையொட்டி அவரது நினைவிடத்தில் சோனியா காந்தி குடும்பத்தினர் மலர் தூவி மரியாதை செலுத்துவது வழக்கம். அந்தவகையில்   ராகுல் காந்தி இந்திராகாந்தி நினைவிடத்திற்கு வந்து அஞ்சலி செலுத்தினார்.  இதற்கான புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.