வாயில் மதுவை ஊற்றி பாலியல் வன்கொடுமை! இன்ஸ்டா காதலனை நம்பி சென்ற பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
கர்நாடகாவில் பெண்ணை காட்டுப்பகுதிக்கு அழைத்து சென்று மதுகுடிக்க வைத்து பாலியல் வன்கொடுமை செய்த இன்ஸ்டா காதலன் கைது செய்யப்பட்டார்.
உடுப்பி மாவட்டம் கார்காலாவை சேர்ந்த இளம் பெண்ணும், அல்தாப் என்பவரும் இரண்டு மாதங்களாக இன்ஸ்டாகிராமில் பழகியுள்ளனர். இருவரும் நேரில் சந்தித்துக்கொள்ளலாம் என முடிவெடுத்து, கார்காலாவில் சந்தித்துள்ளனர். அப்போது அந்த இளம்பெண்ணை, அல்தாப் காட்டுப்பகுதிக்கு அழைத்து சென்று கட்டாயப்படுத்தி, மதுகுடிக்க வைத்துள்ளார். மதுபானத்தில் போதைப்பொருள் கலக்கப்பட்டிருந்ததாகவும் கூறப்படுகிறது.
இதனையடுத்து, அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமைக்கு அல்தாப் உள்ளாக்கியுள்ளார். இவர்களை பிடித்த வலதுசாரி ஆர்வலர்கள், அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். இளம் பெண் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட நிலையில், அல்தாப் மற்றும் அவரது கூட்டாளி ஒருவர் என இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர்