சுதந்திர தினம் - உஷாராக இருக்க உளவுத்துறை எச்சரிக்கை

 
தமிழகம் முழுவதும் பலத்த பாதுகாப்பு! உளவுத்துறை எச்சரிக்கை!

நாளை சுதந்திர தினம் கொண்டாடப்படவுள்ள நிலையில், காவல்துறை மற்றும் ராணுவம் உஷாராக இருக்கும் படி உளவுத்துறை எச்சரித்துள்ளது. 

நாடு முழுவதும் நாளை சுதந்திர தின விழா கொண்டாடப்படவுள்ளது. இதனையொட்டி நாடு முழுவதும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அதாவது, விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், கோவில்கள், தேவாலங்கள் உள்ளிட்ட பகுதிகளில் போலீஸ் குவிக்கப்பட்டு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. டெல்லி செங்கோட்டையில் நாளை காலை பிரதமர் மோடி தேசிய கொடியை ஏற்றி வைத்து நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார். இதன் காரணமாக செங்கோட்டையை சுற்றி 5000க்கும் மேற்பட்ட போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 

இந்த நிலையில், சுதந்திர தினத்தன்று உஷாராக இருக்கும் படி மத்திய, மாநில அரசுகளுக்கு உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.  சுதந்திர தின கொண்டாட்டத்தை சீர்குலைக்கும் வகையில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என எச்சரிக்கை விடுத்துள்ள உளவுத்துறை, இந்தியாவின் முக்கிய இடங்களில் போலீசார், ராணுவத்தினரின் பாதுகாப்பை பலப்படுத்த அறிவுறுத்தியுள்ளது.