காதலை ஏற்காத இளம்பெண்ணை இரம்பு ராடால்... இளைஞரின் கொடூரச் செயல்
தனது காதலை ஏற்காத கோபத்தில் இளம் பெண்ணை இரும்பு ராடால் அடித்து கொலை செய்ய முயற்சித்த இளைஞரை போலீசார் தேடி வருகின்றனர்.
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டம் பெடகன்ட்யாடா மண்டலத்தில் உள்ள பிசி ரோட்டில் இந்த மேக்னா என்ற பெண் பெற்றோருடன் வசித்து வருகிறார். காஜுவாக்காவில் ஒரு தனியார் நிறுவனத்தில் பணி புரியும் ஜம்மு காஷ்மீரை சேர்ந்த நீரஜ் சர்மா அங்குள்ள ஓம் சாந்தி ஆசிரமத்திற்கு மேக்னா பெற்றோர் செல்லும் போது அங்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த சந்திப்பால் ஒரு ஆண்டுகளாக மேக்னாவை பின்தொடர்ந்து வந்து தன்னை காதலிக்க வேண்டும் என தொல்லை கொடுத்து வந்துள்ளார். ஆனால் இது மேக்னாவிற்கு பிடிக்கவில்லை என்று சொன்னாலும் அதை பொருட்படுத்தவில்லை. தன்னை காதலிக்காததால் நீரஜ் மேக்னா போட்டோவை மார்பிங் செய்து அனுப்பியுள்ளார். மார்பிங் செய்த நிர்வாண புகைப்படங்கள் மற்றும் ஆபாச வீடியோக்களை அனுப்பியதால் மேக்னா பெற்றோர் இது குறித்து இரண்டு முறை காவல் நிலையத்திலும் ,சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தனர். ஆனால் போலீசார் விசாரித்து கவுன்சிலிங் செய்து அனுப்பி விட்டனர். இதனால் நீரஜ் சர்மா தன்னை காதலிக்காமல் போலீசில் புகார் அளித்ததால் கொலை செய்ய முடிவு செய்தார்.
இதற்காக இரும்பு ராடு பையில் மறைத்து வைத்து கொண்டு மேக்னா வீட்டுக்கு சென்ற நீரஜ் மீண்டும் காதலிக்கும்படி கூறியுள்ளார். இதற்கு சம்மதிக்காததால் தன்னுடன் கொண்டு வந்த இரும்பு ராடால் சைக்கோ போன்று தாக்கி உள்ளார். இதில் மேக்னா தலை, கைகளில் பலத்த காயம் அடைந்த நிலையில் தடுக்க சென்ற அக்கம்பக்கத்தினர் இருவருக்கும் காயம் ஏற்படுத்தி உடனே அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். நீரஜ் தாக்கியதில் பலத்த காயம் அடைந்த மேக்னாவை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அங்கிருந்து விசாகப்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று 50 க்கும் மேற்பட்ட தையல் போடப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தலையில் தாக்கியதில் மண்டை உடைந்ததால் டாக்டர்கள் மேக்னாவிற்கு மெட்டையடித்து தையல் போட்டனர். உடலில் பலத்த காயங்கள் இருப்பதாகவும், இன்னும் 24 மணி நேரம் சென்றால் எதுவும் சொல்ல முடியாது என்று டாக்டர்கள் கூறுகின்றனர்.
நீரஜ் போன்ற சைக்கோக்கள் ஒன்றன் பின் ஒன்றாக சமூகத்தில் உருவாகி வருவதாகவும் இதுபோன்றவர்களுக்கு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். எப்போது இருந்தாலும் தனது மகளுக்கு நீரஜ்ஜால் உயிருக்கு ஆபத்தி இருப்பதாக பெற்றோர் தெரிவித்துள்ளனர்.இதுகுறித்து நியூபோர்ட் போலீசார் வழக்கு பதிவு செய்து நீரஜை தேடி வருகின்றனர்.