ஈரான் அதிபர் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்
Updated: May 20, 2024, 12:00 IST1716186651031
ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசியின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. ஈரான் அதிபர் இப்ராஹின் ரெய்சி பயணித்த ஹெலிகாப்டர் கடும் பனிமூட்டம் காரணமாக ஈரானின் ஜல்பா பகுதியில் மலையில் மோதி விபத்தில் சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. அஜர்பைஜானில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுவிட்டு திரும்பியபோது இச்சம்பவம் நடந்துள்ளது. ஹெலிகாப்டரில் ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சரும் பயணித்துள்ளார்.

இதுதொடர்பாக பிரதமர் மோடி X தளத்தில், இந்தியா-ஈரான் இடையேயான இருதரப்பு உறவை வலுப்படுத்த அவரது பங்களிப்பு எப்போதும் நினைவுகூரப்படும் என்றும், இந்த துயரமான நேரத்தில் இந்தியா ஈரானுடன் துணை நிற்கும் என்று குறிப்பிட்டுள்ளார் .


