காங்கிரஸ் கட்சியில் இணைந்த ஜெகதீஷ் ஷெட்டர் - ஹூப்பளி தார்வாட் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு..

 
காங்கிரஸ் கட்சியில் இணைந்த ஜெகதீஷ் ஷெட்டர் - ஹூப்பளி தார்வாட்  தொகுதியில் போட்டியிட வாய்ப்பு..


காங்கிரஸ் கட்சி சார்பில் ஜெகதீஷ் ஷெட்டருக்கு ஹூப்பளி தார்வாட் மத்திய தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

கர்நாடக மாநில முன்னாள் முதலமைச்சரும், பாரதிய ஜனதா க ட்சியின் மூத்த தலைவருமான ஜெகதீஷ் ஷெட்டர் நேற்று அக்கட்சியில் விலகினார். பாஜகவிலிருந்து விலகியதோடு தனது எம்எல்ஏ பதவியையும் ஷெட்டர்  ராஜினாமா செய்தார். அதனைத்தொடர்ந்து அவரை காங்கிரஸ் கட்சியின் கர்நாடகா மேலிட பொறுப்பாளர் ரஞ்சித் சிங் ,  முன்னாள் முதலமைச்சர் சித்தாராமையா,  கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார் ஆகியோர் நேற்று சந்தித்து,  காங்கிரஸ் கட்சியில் இணைந்து கொள்ளுமாறு கோரிக்கை விடுத்தனர்.  அதன்பேரில் இன்று காலை பெங்களூரில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்திற்கு  சென்ற  ஜெகதீஷ் ஷட்டர்,   காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே  முன்னிலையில் காங்கிரஸில் தன்னை முறைப்படி இணைத்துக் கொண்டுள்ளார்.  அதன்பின்னர் பேட்டி அளித்த ஜெகதீஷ், கட்சியை வளர்த்தெடுத்த தமக்கு உரிய மரியாதை அளிக்கப்படாததாளேயே  காங்கிரஸில் இணைத்துக் கொள்வதாக விளக்கம் அளித்தார்.

காங்கிரஸ் கட்சியில் இணைந்த ஜெகதீஷ் ஷெட்டர் - ஹூப்பளி தார்வாட்  தொகுதியில் போட்டியிட வாய்ப்பு..

கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட பாரதிய ஜனதா கட்சியில் இந்த முறை சீட் கிடைக்காததால் சில எம்.எல்.ஏக்கள், முன்னாள் எம்.எல்.ஏக்கள் சிலரும் கட்சியில் இருந்து விலகினர். இதன் தொடர்ச்சியாக முன்னாள் துணை முதலமைச்சர்,  லிங்காயத் சமூகத்தின் முக்கிய தலைவர்களில் ஒருவருமான லக்ஷ்மன் சாவடி கடந்த வாரம் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.   அதே கட்சியைச் சேர்ந்த மற்றொரு முக்கிய தலைவரும்,   பாரதிய ஜனதாவில் செல்வாக்கு மிக்க தலைவராக இருந்தவருமான ஜெகதீஷ் ஷெட்டரும்  பாரதிய ஜனதாவிலிருந்து நேற்று விலகினார்.

ஹூப்பளி தார்வாட்  தொகுதியில் ஆறு முறை வெற்றிபெற்றவருமான ஷெட்டருக்கு,   இந்த முறை சீட் வழங்கப்படாததால் அதிருப்தி  அடைந்த அவர் சுயேட்சையாக போட்டியிடப் போவதாக அறிவித்தார். அவருடன் பாரதிய ஜனதா மூத்த தலைவர்கள்  பேச்சுவார்த்தை நடத்திய போது மீண்டும் சீட் வழங்க அவர்கள் விருப்பம் தெரிவிக்கவில்லை.  இதனால் கட்சியிலிருந்து விலகிய ஷெட்டர் தற்போது காங்கிரஸ் கட்சியில்  இணைத்து கொண்டுள்ளார்.  இதனால் பாரதிய ஜனதாவிற்கு எதிர்வரும் தேர்தலில் கடும் நெருக்கடி ஏற்படும் என்று கூறப்படுகிறது.