உற்சாகத்தில் ஜெகன்மோகன் ரெட்டி.. கார் டயரில் சிக்கி தொண்டர் பலியான சோகம்.. பதைக்க வைக்கும் வீடியோ..

 
உற்சாகத்தில் ஜெகன்மோகன் ரெட்டி..  கார் டயரில் சிக்கி தொண்டர் பலியான சோகம்.. பதைக்க வைக்கும் வீடியோ..  உற்சாகத்தில் ஜெகன்மோகன் ரெட்டி..  கார் டயரில் சிக்கி தொண்டர் பலியான சோகம்.. பதைக்க வைக்கும் வீடியோ.. 


ஆந்திர முன்னாள் முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டியின் கார் டயரில் சிக்கி தொண்டர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

ஆந்திர மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சரும், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் தலைவருமான  ஜெகன்மோகன் ரெட்டி , பல்நாடு மாவட்டம் ரெண்டபல்லா கிராமத்தில்  கட்சி நிர்வாகி ஒருவரது வீட்டின் துக்க நிகழ்ச்சிக்கு சென்றார்.  துக்க வீட்டில் ஆறுதல் கூறிவிட்டு காரில் வீடு  திரும்பியுள்ளார்.  கார் குண்டூர் மாவட்டத்தில் சென்றுகொண்டிருந்தபோது , அவரைக்காண ஏராளமாண கட்சித் தொண்டர்கள் கூடிவிட்டனர். 

Image

அப்போது ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் தொண்டரான செல்லி சிங்கையா (வயது 55) என்பவர், ஜெகன்மோகன் ரெட்டியை வரவேற்க சென்றுள்ளார். அவரது கார் மீது மலர்களை தூவி வரவேற்றுள்ளார். அந்த நேரத்தில்  கூட்டம் அலைமோதியதோடு; ஜெகன்மோகன் ரெட்டியை பார்க்க தொண்டர்கள் முண்டியடித்தனர். சிலர்  அவரது கார் மீது ஏறிய நிலையில், செல்லி சிங்கையாவும் காரின் மீது ஏற முயன்றதாக கூறப்படுகிறது. அப்போது கால் தவறி செல்லி சிங்கையா கீழே விழுந்துவிடவே, அதனை ஜெகன் மோகன் ரெட்டியின் கார் டிரைவரும்  கவனிக்கவில்லை. 

அதேபோல் காரில் நின்றுகொண்டிருந்த  ஜெகன்மோகன் ரெட்டியும் அவரை பார்க்கவில்லை. தொண்டர்களின் கூட்டத்திற்கு நடுவே டிரைவர் காரை முன்னோக்கி நகர்த்தினார்.  இதில் காரின் சக்கரம் செல்லி சிங்கையாவின் தலையின் மீது ஏறி இறங்கியதில் அவர் தலை நசுங்கியது. இதையடுத்து உடனடியாக அங்குவந்த போலீசார் மற்றும் தொண்டர்கள் செல்லி சிங்கையாவை மீட்டு அருகே உள்ள குண்டூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்ததாக தெரிவித்தனர்.

ஜெகன்மோகன் ரெட்டியின் காரில் சிக்கி செல்லி சிங்கையா உடல்நசுங்கி  உயிரிழந்த வீடியோ காண்போரை கலங்கச் செய்கிறது. இந்த சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  இந்த சம்பத்தை அடுத்து ஜெகன்மோகன் ரெட்டிக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.