ஜார்க்கண்ட் : பேருந்து மீது லாரி மோதிய விபத்தில் 18 பேர் பலி..!!

 
ஜார்க்கண்ட் : பேருந்து மீது லாரி மோதிய விபத்தில் 18 பேர் பலி..!! ஜார்க்கண்ட் : பேருந்து மீது லாரி மோதிய விபத்தில் 18 பேர் பலி..!!

ஜார்க்கண்ட் மாநிலம் தியோகரில் சிலிண்டர் ஏற்றி வந்த லாரி மீது பேருந்து மோதியதில், 18 பக்தர்கள் உயிரிழந்தனர்.  

ஜார்க்கண்ட் மாநிலம் தியோகரில் உள்ள மோகன்பூர் காவல் எல்லைக்கு உட்பட்ட ஜமுனியா பகுதிக்கு அருகே கன்வாரியா பக்தர்களை ஏற்றிக்கொண்டு பேருந்து ஒன்று பாப பைத்யநாத் தாம் கோவில் நோக்கி  சென்றுள்ளது.  அப்போது அதிகாலை 4.30 மணியளவில் சிலிண்டர்களை ஏற்றிக்கொண்டு வந்த லாரி பேருந்தின் மீது மோதியதில் பெரும் விபத்து ஏற்பட்டது,  இந்த விபத்தில் 18 பக்தர்கள் உயிரிழந்ததாக பாஜக எம்.பி. உறுதிபடுத்தினார்.  

Image

கன்வாரியா யாத்திரைக்காக அந்தப்பேருந்தில்  மொத்தம் 35 பேர் பயணம் மேற்கொண்டநிலையில்,  18 பேர் உயிரிழந்தனர். காயமடைந்தவர்களை தேசிய பேரிடர் மீட்புப் படையினர் மீட்டு  தியோகர் சதார் மருத்துவமனைக்கும், அருகிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் அனுமதித்தனர்.  மேலும், விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களை அடையாளம் காணும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.