நீதிபதி யஷ்வந்த் வர்மா விவகாரம் : 3 பேர் கொண்ட குழு அமைப்பு - சபாநாயகர் ஓம்.பிர்லா அறிவிப்பு..!!

 
நீதிபதி யஷ்வந்த் வர்மா விவகாரம் : 3 பேர் கொண்ட குழு அமைப்பு - சபாநாயகர் ஓம்.பிர்லா அறிவிப்பு..!! நீதிபதி யஷ்வந்த் வர்மா விவகாரம் : 3 பேர் கொண்ட குழு அமைப்பு - சபாநாயகர் ஓம்.பிர்லா அறிவிப்பு..!!

நீதிபதி யஷ்வந்த் வர்மா இல்லத்தில் கட்டு கட்டாக பணம் கண்டெடுக்கப்பட்ட விவகாரத்தில் உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டதாக மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்துள்ளார்.

டெல்லி உயர்நீதிமன்றத்தின் நீதிபதியாக இருந்த யஷ்வந்த் வர்மா இல்லத்தில் சில மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட தீ விபத்தில், வீட்டில் கட்டு கட்டாக பணம் எரிந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த விவகாரம் நீதித்துறையின் மீதான அழுத்தமான கேள்விகளை எழுப்பிய நிலையில், உச்ச நீதிமன்றம் தலையிட்டு மூன்று நீதிபதிகள் அடங்கிய குழு அமைத்து விசாரணை நடத்தி விசாரணை அறிக்கையை பிரதமர் மற்றும் குடியரசு தலைவருக்கு அனுப்பி வைத்தது. இந்நிலையில் குடியரசு தலைவர் வழங்கிய வழிகாட்டுதலின் பெயரில் இன்று மக்களவையில் சபாநாயகர் ஓம் பிர்லா இந்த விவகாயும் குறித்த விளக்கத்தை வழங்கினார். 146 உறுப்பினர்கள் கையெழுத்திட்ட ஆவணத்தை வழங்கியுள்ளதாகவும் அதில் அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் நீதிபதி யஷ்வந்த் வர்மா-வை இந்திய அரசியலமைப்பின் 68 (3) வது பிரிவு மற்றும் 218வது பிரிவின் கீழ் நீதிபதியின் முறையற்ற நடத்தையின் காரணமாக அவரை பதவி நீக்கம் செய்வதற்கான முன்மொழிவை வழங்கியுள்ளனர். 

Om Birla

டெல்லியில் துக்ளக் சாலையில் அமைந்துள்ள 30-வது எண் கொண்ட இல்லத்தில் 15 மார்ச் அன்று ஏற்பட்ட தீ விபத்தில் பணங்கள் கைப்பற்றப்பட்டதோடு அதற்கான ஆதாரங்களும் கிடைக்கப்பெற்றது. இதனையடுத்து 1968 விசாரணை சட்டத்தின் கீழ் நீதிபதியின் தகுதி நீக்கம் செய்வதற்கான தகவல்கள் தனக்கு குடியரசுத் தலைவரால் வழங்கப்பட்டுள்ளது என ஓம் பிர்லா தெரிவித்தார். இப்போது அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி வரும் யஷ்வந்த் வர்மா-வுக்கு எதிராக வழங்கப்பட்டுள்ள புகார்கள் மிகவும் தீவிரமானவை என்றதோடு, உச்சநீதிமன்றம் அமைத்த மூவர் கொண்ட குழு வழங்கிய விசாரணை அறிக்கையும் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்தார். குறிப்பாக வீட்டில் பணம் இருந்ததற்கான ஆதாரங்கள் பின்னர் வீட்டிலிருந்து கைப்பற்ற பணத்திற்கான ஆதாரங்கள் அவற்றை அப்புறப்படுத்த மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் உள்ளிட்டவை விசாரணையின் அறிக்கைகள் மூலம் தெரிய வந்துள்ளது என்பதால், யஷ்வந்த் வர்மா விவகாரத்தில் ஒரு விரிவான விசாரணை நடத்த வேண்டும் என கருத்துவதாக ஓம் பிர்லா கூறினார். 

Parliament

எனவே சட்டப்பிரிவு 124-வது பிரிவு மற்றும் 217 & 218வது பிரிவின் கீழ் யஷ்வந்த் வர்மா பதவி நீக்கம் செய்வதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளது என சபாநாயகர் கூறினார். நீதித்துறையின் நேர்மை மிகவும் முக்கியமானது என்றதோடு அதுதான் ஒரு நபரின் நியாயமான நடத்தையை உறுதி செய்கிறது என்பதால் விவகாரத்தில் மூன்று பேர் அடங்கிய குழு ஒன்றை அமைத்துள்ளதாக கூறினார். அதன்படி, உச்ச நீதிமன்ற நீதிபதி அரவிந்த் குமார் ,சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி மணிந்தர் மோகன் ஸ்ரீ வாஸ்தவா , கர்நாடகாவை சேர்ந்த மூத்த வழக்கறிஞர் பி.வி ஆச்சார்யா ஆகியோர் கொண்ட குழு உருவாக்கப்பட்டுள்ளதாகவும் இக்குழு குறுகிய காலத்தில் விசாரணை அறிக்கையை வழங்குவதோடு அதுவரை யஷ்வந்த் வர்மா-வுக்கு எதிரான தீர்மானம் நிலுவையில் இருக்கும் என ஓம் பிர்லா கூறியுள்ளார். மேலும், ஊழலுக்கு எதிராக அனைவரும் ஒன்றிணைந்து உள்ளோம் என்பதை நாட்டின் மக்களுக்கு உரத்த குரலில் மக்களவையில் இருந்து பதிவு செய்வதாகவும் சபாநாயகர் ஓம் பிர்லா கூறினார்.