பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் மகன் தோல்வி...! கேக் வெட்டி கொண்டாடிய பெற்றோர்!

 
10th 10th

கர்நாடகா மாநிலத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் மகன் தோல்வி அடைந்ததை பெற்றோர் கேக் வெட்டி கொண்டாடிய விநோத சம்பவம் நடந்துள்ளது. 

பொதுத்தேர்வில் நல்ல மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெற வேண்டும் என்பது ஒவ்வொரு மாணவர்களின் கனவாக உள்ளது. ஒருசிலர் எப்பாடியாவது தேர்ச்சி பெற்றுவிட்டால் போது என கடினமாக படித்து பொதுத்தேர்வு எழுதுகின்றனர். தற்போது நாடு முழுவதும் பெரும்பாலான மாநிலங்களில் 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் முடிவடைந்துள்ள நிலையில், அதற்கான தேர்வு முடிவுகள் வெளியாகி வருகின்றன. 
இந்த நிலையில், கர்நாடகா மாநிலத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் மகன் தோல்வி அடைந்ததை பெற்றோர் கேக் வெட்டி கொண்டாடிய விநோத சம்பவம் நடந்துள்ளது. மகன் அபிஷேக் 6 பாடங்களிலும் தோல்வியடைந்துள்ளார், இருப்பினும், ‘நீ தேர்வில்தான் தோல்வி அடைந்துள்ளாயே தவிர, வாழ்க்கையில் தோற்கவில்லை' எனக் கூறி பெற்றோர் அவரை ஊக்கப்படுத்தியுள்ளனர். இதனால் கேக் வெட்டி இந்த நிகழ்வை கொண்டாடியுள்ளனர்.