ஆர்சிபி விவகாரத்தில் திடீர் திருப்பம்... அதிரடி பதவிநீக்கம்

 
அ அ

கர்நாடக முதல்வரின் அரசியல் செயலாளர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

பெங்களூர் அணி 18 ஆண்டுகளில் முதன்  முறையாக ஐ.பி.எல் கோப்பையை வென்ற நிலையில், வெற்றிக் கொண்டாட்டம்  சின்னசாமி மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஐ.பி.எல் கோப்பையை  ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி  வென்றதைக் கொண்டாடும் வகையில்,  கர்நாடகத் தலைநகர் பெங்களூரில் இன்று நடைபெற்ற வெற்றிப் பேரணியில் 11 பேர் உயிரிழந்தனர். 50-க்கும் மேற்பட்டோர்  படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  கூட்ட நெரிசலில் உயிரிழந்த 11 பேரின் குடும்பத்துக்கும் தலா 10 லட்சம் மாநில அரசு சார்பிலும், ரூ. 10 லட்சம் ஆர்சிபி அணி நிர்வாகம் சார்பிலும்  நிவாரணம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் RCB வெற்றிப் பேரணி தொடர்பாக முதல்வருக்கு தவறான ஆலோசனையை வழங்கியதாக குவிந்த குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் அரசியல் செயலாளராக இருந்த கெம்பா கோவிந்தராஜ் அதிரடியாக அந்த பதவியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே 2017லிலும் எம்.எல்.ஏக்களுக்கு பணம் கொடுத்ததாக கெம்பா கோவிந்தராஜிடம் இருந்து டைரி ஒன்று கைப்பற்றப்பட்டது. அந்த டைரி தன்னுடையது அல்ல என கெம்பா விளக்கம் அளித்து இருந்தார் என்பது குறிப்பிடதக்கது.