வயநாட்டில் பேரழிவை ஏற்படுத்திய புன்னப்புழாவில் மீண்டும் வெள்ளப்பெருக்கு

 
s s

செய்தி கேரள மாநிலம் வயநாட்டில் பேரழிவை ஏற்படுத்திய புன்னப்புழாவில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

Work begins to remove landslide debris from Punnappuzha river in Wayanad -  The Times of India

கேரளாவில் கடந்த ஆண்டு பெய்த மழையின் போது வயநாடு முண்டக்கை மலை காடுகளில் இருந்து உற்பத்தியாகும் புன்னப்புழா ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு முண்டக்கை மற்றும் சூரல் மலை பகுதியில் மிகப்பெரிய சேதத்தை ஏற்படுத்தி இருந்தது. இதில் 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். நூற்றுக்கணக்கான வீடுகள் மண்ணில் புதைந்தும், வீடுகள் உடைந்தும் நாசமாகியது. 

உடைமைகளை இழந்த மக்கள் இன்றளவும் துயரத்தில் உள்ள நிலையில், தற்போது வயநாடு முண்டக்கை மலை காடுகளில் அதிக அளவு மழை பெய்து வருவதால் இந்த ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. ஆகையால் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.