வயநாடு நிலச்சரிவு - பலி எண்ணிக்கை 93 ஆக உயர்வு

 
kerala wayanad landslide

கேரளாவில் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 93 ஆக அதிகரித்துள்ளது.
கேரளாவில் வயநாடு பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டு ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று அதிகாலை 2 மணி தொடங்கி தொடர் நிலச்சரிவு ஏற்பட்டு வயநாடு மாவட்டத்தில் பல பகுதிகளில் சாலைகள், பாலங்கள் என வழித்தடங்கள் புதைந்துள்ளன. இப்பகுதிகள் தனித்தீவுப்போல் காட்சியளிக்கும் நிலையில், 500 வீடுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் சிக்கியுள்ளனர். நிலச்சரிவில் சிக்கி இதுவரை  பலியானோர் எண்ணிக்கை 93 ஆக உயர்ந்துள்ளது.   இந்நிலையில் கேரளாவில் நிலச்சரிவால் கடுமையாக பாதிக்கப்பட்ட முண்டகையில் மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. நிலச்சரிவில் 250க்கும் மேற்பட்டோர் சிக்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் உயிரிழப்பின் எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

Wayanad Landslides: Videos Show Destruction After Deadly Landslide In  Wayanad, Several Houses Damaged


முன்னதாக கேரள மாநிலம் வயநாட்டில் மிகப்பெரும் நிலச்சரிவு ஏற்பட்டு ஏராளமானோர் உயிரிழந்துள்ள நிலையில், கேரளாவுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் ஐந்து கோடி ரூபாய் நிவாரணம் அறிவித்தார் தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின். கேரள மாநில முதல்வர் பினராயி விஜயனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு தனது வருத்தத்தை பதிவு செய்த முதல்வர் மு.க. ஸ்டாலின், தமிழ்நாட்டிலிருந்து அனைத்து உதவிகளும் செய்து தரப்படும் என்ற உறுதியும் அளித்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது.