உதவி செய்யுங்க... 5 நாட்களாக உயிரை கையில் பிடித்து நீர்வீழ்ச்ச்சிக்கு நடுவில் கதறிய 3 பேர்

 
நிலச்சரிவில் சிக்கிய 3 பேர் உயிருடன் இருப்பது கண்டுபிடிப்பு நிலச்சரிவில் சிக்கிய 3 பேர் உயிருடன் இருப்பது கண்டுபிடிப்பு

வயநாடு நிலச்சரிவில் சிக்கி 5 நாட்களாக உயிருக்கு போராடி வந்த 3 பேரை கடலோர காவல் படை கண்டுபிடித்துள்ளது.


கேரள மாநிலம் வயநாட்டில்   ஜூலை 30 - செவ்வாய்கிழமை அதிகாலை அடுத்தடுத்து ஏற்பட்ட 3 நிலச்சரிவுகளால்  சூரல்மலை, முண்டக்கை, மேப்பாடி ஆகிய இடங்கள் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளன. இதில் சூரல்மலா கிராமமே மண்ணில் புதைந்துள்ளதாக கூறப்படுகிறது.  சுமார் 500 வீடுகள் மண்ணில் புதைந்துவிட்டதாகவும், வீடுகளில் தூங்கிக்கொண்டிருந்த ஆயிரக்கணக்கான  நிலச்சரிவில் சிக்கியிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு வந்தது.   இதனையடுத்து தேரிய பேரிடர் மீட்பு படை, மாநில தீயணைப்பு மற்றும் மீட்பு துறை, போலீஸார் மற்றும் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த தன்னார்வலர்கள் என பலர் ஐந்தாம் நாளாக மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.  

இந்நிலையில் வயநாடு நிலச்சரிவில் சிக்கி 5 நாட்களாக உயிருக்கு போராடி வந்த 3 பேரை கடலோர காவல் படையினர் கண்டுபிடித்துள்ளானர். முண்டகையில் இருந்து 6 கி.மீ. தொலைவில் வெள்ளரிமலை பகுதியில் உள்ள சூஜிப்பாறை நீர்வீழ்ச்சியின் பாறைகளின் மேல் 3 பேர் அமர்ந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 3 பேரும் பாறைகளின் மேல் அமர்ந்தபடி உதவி கேட்டதை கண்டுபிடித்த கடலோர காவல் படையினர், ஹெலிகாப்டர் மூலம் 3 பேரையும் மீட்டு வர மீட்புப்படையினர் திட்டமிட்டுள்ளனர். இருப்பினும் வெள்ள நீரின் வேகம் அதிகமாக இருப்பதால் அருகே நெருங்குவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.