திருவண்ணாமலையை தொடர்ந்து திருப்பதி மலைப்பாதையில் மண்சரிவு
Dec 3, 2024, 15:00 IST1733218223000
திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு செல்லும் மலைப்பாதையில் மண் சரிவு ஏற்பட்டது.

பெஞ்சால் புயல் காரணமாக கடந்த மூன்று நாட்களாக தொடர் மழை பெய்து வந்தது. இதனால் திருப்பதியில் திருமலையில் உள்ள அணைகள் அனைத்தும் முழு கொள்ளளவு எட்டும் நிலையை அடைந்துள்ளது. இந்நிலையில் இன்று காலை முதல் வெயில் உள்ள நிலையில் திருப்பதியில் இருந்து திருமலைக்கு செல்லக்கூடிய இரண்டாவது மலை பாதையில் ஐந்தாவது கிலோமீட்டர் அருகே திடீரென மண் சரிவு ஏற்பட்டது. அந்த நேரத்தில் எந்த வித வாகனமும் வராததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. உடனடியாக தகவல் அறிந்த தேவஸ்தான அதிகாரிகள் போக்குவரத்து பாதிக்காத வகையில் மண் சரிவை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர் .


