திருப்பதி மலைப்பாதையில் பாறைகள் சரிந்ததால் பரபரப்பு
திருப்பதி மலைப்பாதையில் பாறைகள் சரிந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

திருப்பதி, திருமலையில் நேற்று இரவு முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் எச்சரிக்கையாக செல்ல வேண்டும் என தேவஸ்தான அதிகாரிகள் எச்சரித்து வந்தனர். இதற்கிடையே திருப்பதியில் இருந்து திருமலைக்கு செல்லக்கூடிய இரண்டாவது மலை பாதையின் எட்டாவது கிலோமீட்டர் ஹரிணி நிழற்பந்தல் அருகே தொடர் மழையால் பாறை ஒன்று சரிந்து சாலையில் விழுந்தது. அதிர்ஷ்டவசமாக அந்த நேரத்தில் எந்த வாகனமும் செல்லாததால் விபத்துக்கள் தவிர்க்கப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த தேவஸ்தான அதிகாரிகள் அந்த பாறையை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து மழை பெய்து வருவதால் மண் சரிவு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதால் வாகன ஓட்டிகள் வேகமாக செல்லாமலும், முன்னாள் செல்லும் வாகனத்தை முந்தி செல்ல வேண்டாம் மேலும் தொடர்ந்து எச்சரிக்கையுடன் பயணிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளனர்.


