பழிக்குப் பழி! லஷ்கர்-இ-தொய்பா தளபதி சுட்டுக்கொலை!
ஜம்மு காஷ்மீர் பந்திபோராவில் துப்பாக்கிச் சூடு நடத்திய 2 தீவிரவாதிகள் பாதுகாப்பு படை வீரர்களால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.
கடந்த 21ம் தேதி தெற்கு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பஹல்காமின் மேல் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் மீது தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். 4 பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 26 பேர் உயிரிழந்தனர். 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். பஹெல்காம் பகுதியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் சுற்றுலா பயணிகள். தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளுக்கு இந்தியா தரப்பில் பதிலடி கொடுக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், ஜம்மு காஷ்மீர் பந்திபோராவில் துப்பாக்கிச் சூடு நடத்திய 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை செய்யப்பட்டனர். லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத இயக்கத்தைச் சேர்ந்த 2 தீவிரவாதிகளை இந்திய ராணுவம் சுட்டுக் கொன்றது. எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் பாதுகாப்பு படையினர் நடத்திய பதில் தாக்குதலில் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை செய்யப்பட்டனர். சுட்டுக் கொல்லப்பட்ட இருவரில் ஒருவர் லஷ்கர் இ தொய்பாவின் தளபதிகளில் ஒருவரான அல்தாஃப் லல்லி என்பது தெரியவந்துள்ளது.


