"இசைக்குயில்" லதா மங்கேஷ்கர் உடல்நிலையில் லேசான முன்னேற்றம் - வெளியான முக்கிய தகவல்!

 
லதா மங்கேஷ்கர்

இசை உலகில் நைட்டிங் கேர்ள், இசைக்குயில் என்றழைக்கப்படும் பழம்பெரும் பின்னணிப் பாடகியான லதா மங்கேஷ்கருக்கு  லேசான அறிகுறிகளுடன் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து கடந்த ஜனவரி 8ஆம் தேதி மும்பையிலுள்ள ப்ரீச் கேண்டி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு ஏற்கெனவே மூச்சுத்திணறல் பிரச்சினை இருந்ததால் அவர் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார்.  92 வயதான அவருக்கு மருத்துவர்கள் தனிக்கவனம் செலுத்தி சிகிச்சை அளித்து வருகின்றனர்.

lata mangeshkar: Lata Mangeshkar's health shows signs of improvement - The  Economic Times

இதனிடையே மங்கேஷ்கருக்கு நிமோனியா பாதிப்பும் ஏற்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். மூன்று வாரங்களுக்கு மேலாக மருத்துவமனையில் உள்ள லதா மங்கேஷ்கரின் உடல்நிலை குறித்து அவ்வப்போது மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்து வருகிறது. இருப்பினும் அவரது உடல்நிலை குறித்து தவறான தகவல்கள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றன. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக லதா மங்கேஷ்கரின் செய்தித் தொடர்பாளரும், நண்பருமான அனுஷா ஸ்ரீனிவாசன் தவறான வதந்தி பரப்புவது கவலையளிப்பதாகவும் யாரும் பரப்ப வேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டார். 

Lata Mangeshkar health update: Singer continues to show signs of  improvement - Movies News

இச்சூழலில் இசைக்குயில் லதா மங்கேஷ்கரின் உடல்நிலையில் ஓரளவு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அவருக்கு சிகிச்சையளித்து வரும் மும்பை  ப்ரீச் கேண்டி மருத்துவமனை தெரிவித்துள்ளது.  தவறான செய்திகளை பரப்பாமல் இருப்பதே இந்த நேரத்தில்  அவரது குடும்பத்தினருக்கும், சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களுக்கும் நாம் செய்யும் உதவி என அனுஷா ஸ்ரீனிவாசன் கூறியுள்ளார்.