நீக்கப்பட்ட பகுதிகளை மீண்டும் சேர்க்க ராகுல் காந்தி கோரிக்கை
Jul 2, 2024, 13:35 IST1719907551292
அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்ட தன்னுடைய பேச்சின் பகுதிகளை மீண்டும் சேர்க்கக்கோரி மக்களவை சபாநாயகருக்கு எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடிதம் எழுதியுள்ளார்.

இந்நிலையில் மக்களவையில் ஜூலை 1ல் நான் பேசியதை மீண்டும் அவை குறிப்பில் சேர்க்க வேண்டும். எனது பேச்சை அவை குறிப்பில் இருந்து நீக்கியது நாடாளுமன்ற ஜனநாயகத்திற்கு எதிரானது. மக்களின் பிரச்சினைகளை பேசுவதற்கு ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினருக்கும் உரிமை உள்ளது என்றார். அத்துடன் அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்ட தன்னுடைய பேச்சின் பகுதிகளை மீண்டும் சேர்க்கக்கோரி மக்களவை சபாநாயகருக்கு எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடிதம் எழுதியுள்ளார்.


