4வது நாளாக முடங்கிய மக்களவை..! பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைப்பு..!!

 
மக்களவை மக்களவை


எதிர்கட்சி எம்.பிக்களின் தொடர் முழக்கத்தால் தொடர்ந்து 4வது நாளாக மக்களவை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.  

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த ஜூலை 21ம் தேதி காலை 11 மணிக்கு தொடங்கியது. அவை தொடங்கிய சிறிது நேரத்திலேயே எதிர்க்கட்சிகளின் தொடர் முழக்கத்தால் அன்றைய தினமே முடங்கியது. மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்பட பிற எதிர்க்கட்சி உறுப்பினர்கள் யாருக்கும் பேச அனுமதி வழங்கப்படவில்லை என குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.  அடுத்தடுத்த 2 நாட்களிலும் இதேபோன்று எதிர்க்கட்சி உறுப்பினர்களின் முழக்கத்தாலும் , அமளியாகும் அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டது.  அடுத்த இரண்டு நாட்களும்   மக்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. 

புதிய நாடாளுமன்றம் கட்டடம்

 இந்நிலையில் 4வது நாளாக இன்றும் எதிர்க்கட்சிகள் மக்களவையில் அமளியில் ஈடுபட்டனர். காலை 11 மணிக்கு அவை தொடங்கிய சில நிமிடங்களிலேயே எதிர்க்கட்சி எம்.பிக்கள் அவைக்கு நடுவே சென்று, பீகார் வாக்காளர் பட்டியல் திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கூச்சலிட்டனர்.  இதனையடுத்து 4வது நாளாக இன்று மக்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.