மகாராஷ்டிரா முதலமைச்சர் மற்றும் ஆளுநருக்கு கொரோனா

 
maha cm governor


மகாராஷ்டிரா மாநிலத்தில், முதலமைச்சர் மற்றும் ஆளுநருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதிகபட்சமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 3,260 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் தலைநகர் மும்பையில் மட்டும் கடந்த 24 மணி நேரத்தில் 1,648 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 79 லட்சத்து 45 ஆயிரத்தை தாண்டியுள்ளது. அம்மாநிலத்தில் தற்போது கொரோனாவுக்கு 24 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதிகபட்சமாக மும்பையில் மட்டும் 13,501 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதேபோல் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 3 பேர் உயிரிழந்துள்ள நிலையில், அம்மாநிலத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு லட்சத்து 47 ஆயிரத்து 892 ஆக அதிகரித்துள்ளது. நேற்று கொரோனாவுக்கு பலியான 3 பேரில் இருவர் மும்பையை சேர்ந்தவர்கள் என்றும், மற்றொருவர் ராய்காட் பகுதியை சேர்ந்தவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

maha cm

இந்நிலையில், அம்மாநில முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. காங்கிரஸ் மூத்த தலைவர் கமல்நாத் நேற்று அளித்த பேட்டியில், உத்தவ் தாக்கரேவை நாங்கள் சந்திப்பதாக இருந்தோம், ஆனால், அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதால் அவரை சந்திக்க இயலவில்லை என கூறினார். இதனிடையே, இம்மாநில ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரிக்கும் நேற்று காலை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தெற்கு மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி அனுமதிக்கப்பட்டு உள்ளார்.