மகாராஷ்டிரா, ஜார்க்கண்டில் ஆட்சி அமைக்கப் போவது யார்? தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு

 
s

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளின்படி மகாராஷ்டிரா, ஜார்க்கண்டில்  பா.ஜ.க., கூட்டணி ஆட்சி அமைக்கும் எனக் கூறப்படுகிறது.

Assembly election: How accurate were Maharashtra, Jharkhand exit polls in  2019? | Latest News India - Hindustan Times
288 சட்டசபை தொகுதிகள் கொண்ட மகாராஷ்டிரா சட்டசபைக்கு ஒரே கட்டமாக இன்று தேர்தல் நடைபெற்றது. அங்கு ஏக்நாத் ஷிண்டேயின் சிவசேனா, பாஜகவின் அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் அடங்கிய அணி ஒரு கூட்டணியாகவும், காங்கிரஸ், உத்தவ் தாக்கரேயின் சிவசேனா, சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகள் அடங்கிய மற்றொரு அணியாகவும் தேர்தலை சந்தித்தன. இம்மாநிலத்தில் ஆட்சி அமைக்க 145 இடங்கள் தேவை. இந்நிலையில் ரிபப்ளிக் டிவி- பிமார்க் கருத்துக்கணிப்பின் படி, பா.ஜ., கூட்டணி: 137 -157, இண்டியா கூட்டணி: 126 - 146, மற்ற கட்சிகள்: 2-8 பிடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் நியூஸ் 18 டிவி கருத்துக்கணிப்பின் படி, தே.ஜ., கூட்டணி : 154, இண்டியா கூட்டணி : 128,  மற்ற கட்சிகள்: 6 ஆகும். ஏபிபி -மெட்ரைஸ் நிறுவனத்தின் கூற்றுப்படி, தே.ஜ., கூட்டணி: 150 -170, இண்டியா கூட்டணி: 110-130, மற்ற கட்சிகள்: 8-10 பீப்பிள்ஸ் பல்ஸ் கருத்துக்கணிப்பின் படி, தே.ஜ., கூட்டணி: 175- 195, இண்டியா கூட்டணி: 85-112, மற்ற கட்சிகள்:7-12 இடங்களை பிடிக்கும் எனக் கூறப்பட்டுள்ளது. ஆகவே மகாராஷ்டிரா பாஜக கூட்டணி ஆட்சியை பிடிக்க வாய்ப்புள்ளது. 

இதேபோல்  81 தொகுதிகளை கொண்ட ஜார்க்கண்ட் சட்டசபைக்கு நவ.,13 மற்றும் 20 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடந்தது. இங்கு தே.ஜ. கூட்டணி ஒரு அணியாகவும், இண்டியாகூட்டணி மற்றொரு அணியாகவும் களமிறங்கின. இம்மாநிலத்தில் ஆட்சியை பிடிக்க 41 இடங்களில் வெற்றி பெற்றாக வேண்டும். நியூஸ் 18 கருத்துக்கணிப்பின் படி, தே.ஜ., கூட்டணி: 47, இண்டியா கூட்டணி : 30, மற்ற கட்சிகள்: 4, பீப்பிள்ஸ் பல்ஸ் கருத்துக்கணிப்பின் படி, தே.ஜ., கூட்டணி :44-53, இண்டியா கூட்டணி:25-37, மற்ற கட்சிகள் :5-9, ஆக்சிஸ் மை இந்தியா கருத்துக்கணிப்பின் படி, தே.ஜ.,கூட்டணி:25, இண்டியா கூட்டணி:53, மற்ற கட்சிகள்:3 இடங்களை பிடிக்க வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஆகவே ஜார்க்கண்டில் பாஜக ஆட்சியில் உள்ள நிலையில், மீண்டும் அங்கு பாஜகவே ஆட்சியை கூட்டணி ஆட்சியை தக்க வைக்கும் எனக் கூறப்படுகிறது.