மகாராஷ்டிராவில் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை மீண்டும் பள்ளிகள் திறப்பு!

 
school

மகாராஷ்டிராவில் 1 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. 

school

இந்தியாவில் கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் மக்களை வாட்டி வதைத்து வருகிறது.  இதனால் பொருளாதார வீழ்ச்சியை சந்தித்ததுடன், பலர் தொற்றால் பாதிக்கப்பட்ட பரிதாபமாக உயிரிழந்தனர் . முதல் அலை, இரண்டாம் அலை என இந்தியாவை கொரோனா பரவல் கடுமையாக தாக்கிய  நிலையில்,  தற்போது டெல்டா மற்றும் ஒமிக்ரான் இணைந்து மூன்றாம் முறையாக பரவி வருகிறது.  இதிலும் ஒமிக்ரான் தொற்று  சமூக பரவலாக மாறி உள்ளது என்று மருத்துவ வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.  கடந்த 24 மணி நேரத்தில் 3 லட்சத்து 6 ஆயிரத்து 64 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.  அத்துடன் 439 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர்.  இதன் காரணமாக பள்ளி,  கல்லூரிகள் தற்போது பல்வேறு மாநிலங்களில் மூடப்பட்டு ஆன்லைன் வழியாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.

cbse exams

இந்நிலையில் மகாராஷ்டிர மாநிலத்தில் பள்ளிகளுக்கு கடந்த மாதம் முதல் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. தற்போது மாணவர்களின் கற்றல் திறனில் பாதிப்பு ஏற்படக்கூடும் என அச்சம் ஏற்பட்டுள்ளதால் இன்று முதல் மகாராஷ்டிராவில் 1 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. மும்பை,  புனே உள்ளிட்ட நகரங்களில் பெற்றோர்கள் விருப்பப்பட்டால் மாணவர்கள் பள்ளிக்கு வரலாம் என்று அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. அதேசமயம் தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. மகாராஷ்டிராவை பொருத்தவரை நேற்றைய ஒரேநாளில்  40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர். அத்துடன்கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை நேற்று  44 ஆக உயர்ந்துள்ளது கவனிக்கத்தக்கது.