நாட்டில் பேச்சு சுதந்திரம் இல்லை, பேச துணிபவர்கள் சிறையில் அடைக்கப்படுகிறார்கள் - மல்கார்ஜுன கார்கே

 
Mallikarjuna Kharge

நாட்டில் பேச்சு சுதந்திரம் இல்லை எனவும், மத்திய அரசிற்கு எதிராக பேச துணிபவர்கள் கம்பிகளுக்கு பின்னால் தள்ளப்படுகிறார்கள் எனவும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றம்சாட்டியுள்ளார். 

அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே டெல்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.  நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் பேச்சு சுதந்திரம் இல்லை. மத்திய அரசிற்கு எதிராக பேச துணிபவர்கள் கம்பிகளுக்கு பின்னால் தள்ளப்படுகிறார்கள். நாட்டின் சுதந்திரத்திற்காக காங்கிரஸ் போராடியது. காங்கிரஸ் அரசு நாட்டின் உள்கட்டமைப்பை மேம்படுத்தியது. மக்களிடம் வீடு வீடாக சென்று மத்திய அரசின் திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவோம். அதன் வாயிலாக மத்திய அரசு மக்களுக்கு எதிராக உள்ளது என்பதை அவர்களுக்கு தெரியப்படுத்துவோம்.

பணவிக்கத்தை கட்டுப்படுத்துவோம் என்ற வாக்குறுதியுடன் 2014-ல் பாஜக ஆட்சிக்கு வந்தது. பாஜக ஆட்சிக்கு வந்ததில் இருந்து அத்தியாவசியப் பொருட்களின் விலையும், வறுமையும் மட்டுமே உயர்ந்து வருகின்றன. 2014ம் ஆண்டு பணவீக்கத்தை குறைப்பதாக பாஜகவாக்குறுதி அளித்தது. ஆனால் அதை எதையும் மத்திய அரசு செய்யவில்லை. இவ்வாறு கூறினார்.