ஹாஸ்டலுக்குள் புகுந்து பெண்ணை கத்தியால் குத்தி கொலை செய்த இளைஞர்

 
Man Breaks Into Bengaluru Hostel At Night, Slits Woman's Throat Man Breaks Into Bengaluru Hostel At Night, Slits Woman's Throat

பெங்களூரு நகரில் கோரமங்களா என்ற பகுதியில் உள்ள ஹாஸ்டலுக்குள் நேற்று இரவு உள்ளே நுழைந்த நபர் ஒரு பெண்ணை கத்தியால் குத்தியும் கழுத்தை நெருக்கியும் கொலை செய்துவிட்டு தப்பி ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Man breaks into Bengaluru hostel at night, slits woman's throat

பெங்களூரு நகரில் கோரமங்களா என்ற பகுதியில் பெண்களுக்கான ஹாஸ்டலில் நேற்று இரவு மர்ம நபர் ஒருவர் உள்ளே நுழைந்து பிகாரை சேர்ந்த பெண் ஒருவரை கத்தியால் குத்தியும் கழுத்தை நெருக்கியும் கொலை செய்துவிட்டு தப்பி ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொலை சம்பவத்தில் கிருத்தி குமாரி (24) என்ற இளம் பெண் உயிரிழந்துள்ளார். 

பெங்களூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த கிருத்தி குமாரி நேற்று மாலை தனது பணியை முடித்துவிட்டு இரவு தனது ஹாஸ்டலில் உள்ள மூன்றாவது மாடியில் இருந்த போது இரவு 11.10 மணி அளவில் மர்ம நபர் ஹாஸ்டலுக்குள் நுழைந்து நேராக மூன்றாவது மாடிக்கு சென்று அங்கிருந்து பெண்ணை கத்தியால் குத்தியும் கழுத்தை நெருக்கியும் கொடூரமாக கொலை செய்துவிட்டு தப்பி சென்றுவிட்டார். இதில் கிருத்தி குமாரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கோரமங்களா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பெண்ணின் உடலை கைப்பற்றி வழக்கு பதிவு செய்து விசாரணையை துவங்கியுள்ளனர். 

Man Breaks Into Bengaluru Hostel At Night, Slits Woman's Throat: Cops

சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் கொலை செய்த நபரை தேடி வருகின்றனர். விடுதி உரிமையாளர் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. இறந்த பெண்ணின் நெருங்கிய வட்டாரத்தில் இருந்த நபரை கொலை செய்திருக்கலாம் என்றும் காவல்துறை எதிர்பார்க்கின்றனர்.