இது என்னடா விநாயகருக்கு வந்த சோதனை! விநாயகர் சிலையில் இருந்த லட்டு திருட்டு

 
க்ச்க்

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் விநாயகர் கையில் வைத்திருந்த லட்டு நள்ளிரவில் மர்மநபர்களால் திருடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 Ganesh pandal laddu theft


தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் பாச்சுபள்ளியில் உள்ள பிரகதி நகர் காலனியில்  அடுக்குமாடி குடியிருப்பில் ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தி உற்சவம் மிக சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். அவ்வாறு விநாயகர் சதுர்த்தியையொட்டி விநாயகர் மண்டபம் அமைத்து விநாயகர் கையில்  பிரத்தியேகமாக தயார் செய்த லட்டு வைக்கப்படும். மூன்று நாட்கள் பூஜைக்கு பிறகு லட்டு ஏலம் விடப்பட்டு அந்த ஏலத்தில் வரக்கூடிய பணம் அடுக்குமாடி குடியிருப்பு வளர்ச்சி பணிகளுக்கு பயன்படுத்தப்படும். அவ்வாறு இந்த ஆண்டும் விநாயகர் சதுர்த்தி உற்சவம் மிகச்சிறப்பாக கொண்டாடப்பட்டது. 

இந்நிலையில்  நேற்று இரவு 1 மணியளவில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் விநாயகர் மண்டபத்தில் விநாயகர்  கையில் இருந்த லட்டுவை திருடிச் சென்றார். இவை அனைத்தும் அங்கு வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தது. இது குறித்து போலீசில் புகார் அளித்தனர். போலீசார் சிசிடிவி கேமரா காட்சிகளின் ஆதாரமாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.