மணிப்பூர் பாலியல் வன்முறை - 2 பெண்களும் உச்சநீதிமன்றத்தில் முறையீடு

 
supreme court supreme court

மணிப்பூர் பாலியல் வன்முறை வீடியோவில் காணப்பட்ட இரண்டு பெண்கள் உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளனர். 

மணிப்பூரில் குகி பழங்குடியின சமூகத்திற்கும், மெய்தி இன மக்களுக்கும் கடந்த மே மாதம் முதலே மோதல் போக்கு இருந்து வருகிறது. இந்த மோதல் வன்முறையாக மாறிய நிலையில், அந்த மாநிலமே போர்க்களமாக காட்சி அளித்து வருகிறது. வன்முறையால் இதுவரை 100க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ள நிலையில், ஆயிரக்கணக்கானோர் காயம அடைந்துள்ளனர். ஏராளமான பொதுச்சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளது. கலவரத்தை கட்டுப்படுத்த ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், கடந்த நில நாட்களுக்கு முன்னர் பழங்குடியினத்தை சேர்ந்த இரண்டு பெண்களை மெய்தி சமூகத்தை சேர்ந்த இளைஞர்கள் நிர்வாணமாக இழுத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த வீடியோ வெளியானது. இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இது தொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு மத்திய மாநில அரசுகளுக்கு எதிர்க்கட்சிகள் அழுத்தம் கொடுத்தன. இந்த வழக்கை மாநில அரசு சிபிஐ-யிடம் ஒப்படைத்த நிலையில்,  அந்த வீடியோ விவகாரம் தொடர்பாக சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

manipur

இந்த நிலையில், பாதிக்கப்பட்ட இரண்டு பெண்கள் உச்சநீதிமன்றத்தை நாடியுள்ளனர். மணிப்பூர் பாலியல் வன்முறை வீடியோவில் காணப்பட்ட இரண்டு பெண்கள் உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளனர். அவர்களின் மனுவை உச்சநீதிமன்றம் தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு இன்று விசாரிக்கிறது.