மணிப்பூரில் அரசியல்வாதிகளின் வீடுகளை குறிவைக்கும் வன்முறைக்காரர்கள்

 
manipur

மணிப்பூர் மாநிலத்தில் வன்முறை தொடர்ந்து நீடித்து வரும் நிலையில், அரசியல்வாதிகளின் வீடுகளை குறிவைத்து வன்முறைக்காரர்கள் தாக்குதல் நடத்தி வரும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் மேதேயி சமுதாய மக்கள் பட்டியலின அந்தஸ்து கோரி போராடி வருகின்றனர். இதனையடுத்து இதுகுறித்து மத்திய அரசுக்கு பரிந்துரைக்குமாறு மாநில அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.  அதன்படி மைதேயி சமுக மாணவர் சங்கம் சார்பில் கடந்த 3ம் தேதி பேரணி நடைபெற்றது.  இந்நிலையில், மைதேயி சமூகத்தினரை பட்டியலின பிரிவில் சேர்க்க எதிர்ப்பு தெரிவித்து அவர்கள் நடத்திய பேரணிக்கு எதிராக குகி பழங்குடியினரும் பேரணி நடத்தினர். இதில், இரு தரப்புக்கும் இடையே தகராறு ஏற்பட்டு அது வன்முறையாக வெடித்தது. அப்போது ஏற்பட்ட மோதலில் வெடித்த வன்முறை மாநிலம் முழுவதும் பரவியது.  இந்தக் கலவரத்தில் இதுவரை 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.  இதையடுத்து, ராணுவம், அசாம் ரைபிள்ஸ் படையினர், சிஆர்பிஎப் வீரர்கள் வர வழைக்கப்பட்டு வன்முறை கட்டுப்படுத்தப்பட்டது. இதனிடையே நேற்று முன் தினம் மீண்டும் அங்கு வன்முறை வெடித்தது.

manipur

அரசியல்வாதிகளின் வீடுகளை குறிவைத்து வன்முறைக்காரர்கள் தாக்குதல் நடத்தி வரும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.. மணிப்பூர் தலைநகர் இம்பாலில் உள்ள வெளியுறவுத் துறை மற்றும் கல்வித் துறை இணை அமைச்சர் ராஜ்குமார் ரஞ்சன் சிங்கின் வீட்டுக்கு வியாழக்கிழமை இரவு வன்முறையாளர்கள் தீ வைத்தனர். இதேபோல் மணிப்பூர் அரசின் அமைச்சரான நெம்சா கிப்ஜென் இல்லம் வியாழக்கிழமை அடையாளம் தெரியாத வன்முறையாளர்களால் தீவைக்கப்பட்டது. இதேபோல் மணிப்பூர் அமைச்சரவையில் இருக்கும் ஒரே பெண் அமைச்சரான நெம்சா குகி, அமைச்சர்கள் கோவிந்தாஸ் கொண்டதவுஜனின்,  டி. பிஸ்வாஜித் சிங்-ன் இம்பால் உள்ளிட்டோரின் வீடுகளும் தாக்கப்பட்டன.  தொடர்ந்து அரசியல்வாதிகளின் வீடுகள் வன்முறையாளர்களால் தாக்கப்படுவது அம்மாநிலத்தில் பதற்றத்தை அதிகரித்துள்ளது.