மணிப்பூர் கலவரம் - ஓய்வு பெற்ற 3 பெண் நீதிபதிகள் குழு அறிக்கை தாக்கல்

 
supreme court

மணிப்பூர் கலவரம் தொடர்பாக ஓய்வு பெற்ற 3 பெண் நீதிபதிகள் அடங்கிய குழு உச்சநீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

மணிப்பூரில் குக்கி பழங்குடியினர் மற்றும் மெய்தி இனத்திற்கும்  கடந்த மே மாதம் முதலே மோதல் போக்கு ஏற்பட்டு வந்த நிலையில் வன்முறை வெடித்தது. இதில் 100க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்ட நிலையில், குக்கி சமூகத்தை சேர்ந்த  இரண்டு பெண்களை மெய்தி சமூகத்தை சேர்ந்த இளைஞர்கள் நிர்வாணமாக இழுத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த வீடியோ கூடுதல் அதிர்ச்சியை கிளப்பியது. இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது இதுதொடர்பாக சிபிஐ விசாரணை நடைபெற்று வருகிறது. 

manipur

இதனிடையே மணிப்பூர் வன்முறை சம்பவம் தொடர்பாக மூன்று ஓய்வு பெற்ற நீதிபதிகள் கொண்ட விசாரணை குழுவை நியமித்தது  உச்சநீதிமன்றம் . நீதிபதி கீதா மிட்டல் தலைமையில்  ஓய்வு பெற்ற பெண் உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஷாலினி ஷோஷி, ஆஷா மேனன் ஆகியோர் கொண்ட 3 பேர் குழு மணிப்பூர் வன்முறை தொடர்பாக விசாரணை, இழப்பீடுகள், மறுவாழ்வு உதவி உள்ளிட்டவை குறித்து நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது.

Manipur

இந்நிலையில் மணிப்பூர் கலவரம் தொடர்பாக ஓய்வு பெற்ற 3 பெண் நீதிபதிகள் அடங்கிய குழு உச்சநீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல்  செய்துள்ளது. கலவரத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை விசாரித்து நிவாரணம், மறுவாழ்வு நடவடிக்கைகளை மேற்கொள்ள குழு அமைக்கப்பட்டது.