டெல்லி முன்னாள் துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியாவின் சொத்துக்கள் முடக்கம்

 
manish sisodia

மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள டெல்லி முன்னாள் துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியாவின் சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளது. 

டெல்லியில் மதுபான கொள்கையை தளர்த்தி ரூ.1000 கோடி வரை ஊழல் செய்ததாக குற்றம் சாட்டு எழுந்த நிலையில், துணை முதலமைச்சராக இருந்த மணிஷ் சிசோடியாவை கடந்த பிப்ரவரி மாதம் 26-ம் தேதி சிபிஐ கைது செய்தது. இதேபோல் மணிஷ் சிசோடியா மீது அமலாக்கத்துறையும் கடந்த மார்ச் 9-ம் தேதி வழக்குப்பதிவு செய்தது. கைது செய்யப்பட்ட மணிஷ் சிசோடியா டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார். மணிஷ் சிசோடியாவை சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை தனித்தனியே நீதிமன்ற காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றன. சிபிஐ தொடர்ந்த வழக்கில் தனக்கு ஜாமின் வழங்கும்படி சிசோடியா தொடர்ந்த வழக்கை கடந்த மே மாதம் 30 ம் தேதி டெல்லி ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது. இதேபோல் அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் தனக்கு ஜாமின் வழங்கும்படி சிசோடியா டெல்லி ஐக்ரோட்டில் மனு தாக்கல் செய்த நிலையில், ஜாமின் வழங்க டெல்லி ஐகோர்ட்டு மறுத்துவிட்டது. இதனை தொடர்ந்து சிசோடியா மீண்டும் திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில், டெல்லி முன்னாள் துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியாவின் சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளது. மணிஷ் சிசோடியா மற்றும் அவரது மனைவிக்கு சொந்தமான சொத்தக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் 52 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.