ஹைதராபாத் குடியிருப்பு பகுதியில் பயங்கர தீ விபத்து- 17 பேர் உயிரிழப்பு

 
ச் ச்

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் முத்து கடைக்கு மேல் உள்ள வீட்டில் திடீரென ஏற்பட்ட தீ விபத்து 17 பேர் இறந்த நிலையில், பலர் பலத்த காயங்களுடன் போலீசார் மீட்டனர்.

தெலங்கானா மாநிலம் ஐதராபாத் ஓல்ட் சிட்டியில் சார்மினார் அருகே மிர் சவுக்கில் உள்ள குல்சார் ஹவுஸின் முதல் மாடியில்  ஒரு கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் அடுத்தடுத்து வீடு கடைகளுக்கு பரவியது. இந்த பகுதி முழுவதும் குறுகிய இடத்தில் பல வீடு மற்றும் கடைகள் உள்ளது. இந்த நிலையில்  தீ விபத்தில் சிக்கியவர் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கும் தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர். அந்த பகுதியில் அவசர காலத்தில்  வெளியேறும் வழியில்லாததால் தீக்காயம் அடைந்தவர்கள் உடனடியாக வெளியே வரமுடியாததால் 17 பேர் இறந்தனர். பலர் காயமடைந்தனர்

சம்பவ இடத்திற்கு 5 தீயணைப்பு வாகனங்கள் வந்து தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு அனைவரையும் மீட்க முயன்றனர். ஆனால் அதற்குள் 17 பேர் இறந்த நிலையில்  காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் ஐந்து பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். நிகழ்விடத்தை அமைச்சர் பொன்னம் பிரபாகர்   பார்வையிட்டார். இந்த சம்பவம் ஒரு விபத்துதான் என்றாலும், அரசு ஊழியர்கள் உடனடியாக செயல்பட்டு மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர். இறந்தவர்களில் மூன்று பெண்கள் மற்றும் நான்கு குழந்தைகள் என்பதும்  பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அறியப்படுகிறது. இந்த விபத்து குறித்து தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி அதிர்ச்சி கவலையை   தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு அரசு ஆதரவாக நிற்கும் என்று அவர் கூறினார்.