தீ பரவட்டும்.. டெல்லி முதல்வருக்கு நன்றி கூறிய தமிழக முதல்வர் ஸ்டாலின்..

 
 தீ பரவட்டும்.. டெல்லி முதல்வருக்கு நன்றி கூறிய தமிழக முதல்வர் ஸ்டாலின்..


சட்டமசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்கும் விவகாரத்தில்  தமிழகத்தைப்போல டெல்லி சட்டமன்றத்திலும்  தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று கூறிய அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.  

 சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு  அனுப்பிவைக்கப்படும்  மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க ஆளுநருக்கு காலக்கெடு நிர்ணயிக்க வேண்டும் ,  மாநில ஆளுநர்களுக்கு மத்திய அரசு, குடியரசுத் தலைவர் தகுந்த அறிவுரை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனித்தீர்மானம் நிறைவேற்றினார்.  இதேபோல் பாஜக அல்லாத மாநிலங்களின் முதலமைச்சர்களும் ,  அந்தந்த மாநில சட்டமன்றங்களில், மசோதாக்களுக்கு ஆளுநர்கள் ஒப்புதல் அளிப்பதற்கான காலக்கெடுவை நிர்ணயம் செய்யுமாறு வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுந்தியிருந்தார்.  

3 நாட்கள் விடுமுறைக்குப் பிறகு இன்று கூடுகிறது தமிழக சட்டப்பேரவை..

இதனை ஏற்று டெல்லி முதலமைச்சரும், ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால், பதில் கடிதம் எழுதியிருந்தார். அதில், “கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிராக மாநில ஆளுநர்கள் மற்றும் துணை நிலை ஆளுநர்கள் செயல்படுகின்றனர். பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் அரசு மசோதாக்களை ஆளுநர்கள் காலவரையன்றி கிடப்பில் போடுகின்றனர்.

அதிகபட்சமாக டெல்லி துணை நிலை ஆளுநர், மாநில அரசு தாக்கல் செய்த பட்ஜெட்டுக்குகூட ஒப்புதல் தராமல் தடுத்து நிறுத்தினார். கல்வி, சுகாதாரம், குடிநீர், தொழில் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் எங்கள் அரசை செயல்பட விடாமல் ஆளுநர் முட்டுக்கட்டை போடுகிறார். இதுபோன்ற பனிப்போரை ஆளுநர்கள் மூலம் மத்திய அரசு மாநில அரசு மீது தொடுக்கிறது. இதற்கு எதிராக ஒற்றைக் குரலில் இருக்க வேண்டும். தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் தொடர்பாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நான் வரவேற்கிறேன். நானு

அரவிந்த் கெஜ்ரிவால்ம் விரைவில் டெல்லி சட்டப்பேரவையில் இது போன்ற தீர்மானத்தை நிறைவேற்ற இருக்கிறேன்” என்று கூறியிருந்தார்.

இதனையடுத்து டெல்லி முதல்வருக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “தமிழ்நாடு சட்டப்பேரவையின் தீர்மானத்தைப் பாராட்டி  எங்கள் குழுவில் இணைந்ததற்காக  நன்றி.  உண்மையில், எந்தவொரு ஜனநாயகத்திலும் சட்டமன்றத்தின் இறையாண்மையே உச்சமானது. எந்த 'நியமிக்கப்பட்ட' ஆளுநரும் 'தேர்ந்தெடுக்கப்பட்ட' அரசாங்கங்களின் சட்டமன்ற அதிகாரம் மற்றும் பொறுப்புகளை குறைத்து மதிப்பிடக்கூடாது” என்று கூறியுள்ளார்.  மேலும், தீ பரவட்டும் என்கிற ஹேஷ்டேக்கும் பதிவிட்டுள்ளார்.