நாக சைதன்யா- சமந்தா விவாகரத்துக்கு இவரே காரணம்- தெலுங்கானா அமைச்சர் பரபரப்பு குற்றச்சாட்டு

 
Samantha-Naga Chaitanya Divorce

திரைப்பட நடிகர் நாக சைதன்யா மற்றும் நடிகை சமந்தா விவாகரத்துக்கு பிஆர்எஸ் கட்சியின்  செயல் தலைவர் முன்னாள் அமைச்சர் கேடிஆர் தான் காரணம் என தெலுங்கானா அமைச்சர் கொண்டா சுரேகா பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.

Konda Surekha Down With Dengue

தெலுங்கானா மாநில அறநிலையத்துறை சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் கொண்டா சுரேகா ஒருங்கிணைந்த மேடக் மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சராக உள்ளார். இந்நிலையில் சில நாட்கள் முன்பு  துப்பாகாவில் நடந்த கல்யாண லட்சுமி மற்றும் ஷாதி முபாரக் திருமண நிதி உதவி திட்டத்தில் பயனாளிகளுக்கு  காசோலை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் அமைச்சர் கொண்டா சுரேகா பங்கேற்றார். இந்நிகழ்ச்சிக்கு வந்த அவரை மேடக் பாஜக எம்பி ரகுநந்தன் ராவ் அவரது கழுத்தில் மாலையிட்டு வரவேற்றார். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் ட்ரோல் செய்யப்பட்டது.  இந்த ட்ரோல்களால் அமைச்சர் கொண்டா சுரேகா கண்டனம் தெரிவித்த நிலையில் சமூக வலைதளங்களில் தனக்கு எதிராக பிஆர்எஸ் அமைப்பினர் பிரச்சாரம் செய்து வருகின்றனர் என்றார்.  

Konda Surekha: కేటీఆర్ బలుపు మాటలు తగ్గించుకో.. కొండా సురేఖ హెచ్చరిక..! | Minister  Konda Surekha expressed his anger on KTR - Telugu Oneindia

இந்நிலையில் இன்று ஐதராபாத் காந்தி பவனில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கொண்டா சுரேகா, “கே.டி.ஆர். கடந்த 10 ஆண்டு ஆட்சியின் போது பல  ஹீரோயின்களின் வாழ்க்கையில்  விளையாடி உள்ளார். ஹீரோயின்களை போதைக்கு அடிமையாக்கியது இவர்தான். சினிமா துறையில் இருந்து சிலர் விலகி இருப்பதற்கும் அவர்தான் காரணம். நடிகர் நாக சைதன்யா - நடிகை சமந்தா விவாகரத்து செய்ததற்கும் கே.டி.ஆர். தான் காரணம் . பல நடிகர், நடிகைகளில் போன்கள் ஒட்டு கேட்கப்பட்டு அவர்களை மிரட்டி வந்துள்ளார். பெண்களை கேடிஆர் கேவலமாக பார்க்கிறார். நேற்று அமைச்சர் சீதக்கா மீதும் இன்று தன் மீது சமூக வளைதளத்தில் துபாயில் இருந்து கே.டி.ஆர்.காக ட்ரோல் செய்யப்படுகிறது. அவர் தவறு செய்யாவிட்டால்  ஒரு பெண் அமைச்சரை ட்ரோல் செய்தால் கண்டிக்கும் கலாச்சாரம் கேடிஆருக்கு இல்லையா? என்னை ட்ரோல் செய்வது தொடர்பாக முன்னாள் அமைச்சர் ஹரிஷ் ராவ் கண்டித்துள்ளார். ஆனால் ஏன் கேடிஆர் பேசவில்லை?” என்றார்