பெங்களூருவில் வந்தே பாரத் ரயில் மீது மர்ம நபர்கள் கல்வீச்சு!

 
130 கி.மீ வேகத்தில் செல்லும்  சென்னை - கோவை வந்தே பாரத் ரயில் : 44 ரயில்களின் வேகம் அதிகரிப்பு ..

பெங்களூருவில் வந்தே பாரத் ரயில் மீது மர்ம நபர்கள் கல்வீசி தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

வந்தே பாரத் ரயிலானது கடந்த 2019 ஆம் ஆண்டு புதுடில்லி - வாரணாசி இடையே முதலில் இயக்கப்பட்டது. தற்போது சென்னை -மைசூர்,  சென்னை - கோவை என மொத்தம் 18 வந்தே பாரத்  இயக்கப்பட்டு வருகின்றன. மத்திய பிரதேசத்தில் 5 வந்தே பாரத் ரெயில் சேவைகளை பிரதமர் மோடி கடந்த செவ்வாய் கிழமை கொடியசைத்து தொடங்கி வைத்தார். போபாலில் உள்ள ராணி கமலாபதி ரயில் நிலையத்தில் 5 வந்தே பாரத் ரெயில்களை தொடங்கி வைத்தார். இதன் மூலம் நாட்டில் இயக்கப்படும் வந்தே பாரத் ரெயில்களின் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்துள்ளது.  

இந்நிலையில், பெங்களூருவில் வந்தே பாரத் ரெயில் மீது மர்ம நபர்கள் கல்வீசி தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரு, பெங்களூரு-தார்வார் இடையே வந்தே பாரத் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது.  இந்த நிலையில் நேற்று முன்தினம் மதியம் தார்வாரில் இருந்து வந்தே பாரத் ரெயில் பெங்களூரு நோக்கி வந்து கொண்டிருந்தது. அப்போது தாவணகெரே (மாவட்டம்) கலெக்டர் அலுவலகம் அருகே ஜி.எம்.ஐ.டி. வளாகம் பின்புறம் ரெயில் வந்த போது மர்மநபர்கள் வந்தே பாரத் ரெயில் மீது கல்வீசி தாக்கியுள்ளனர். இந்த கல்வீச்சி சம்பவத்தில் ரெயிலின் சி-4 பெட்டியின் ஜன்னல் கண்ணாடி நொறுங்கியது. அதாவது ஜன்னலின் வெளிப்புற மேற்பரப்பில் சேதம் ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.  இந்த சம்பவம் தொடர்பாக ரயில்வே பாதுகாப்பு படையினர்   தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.