ஆட்சி அமைக்க உரிமை கோரினார் மோடி

 
மோடி

பிரதமர் நரேந்திர மோடி ஜனாதிபதி திரௌபதி முர்முவை சந்தித்து, மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்க உரிமை கூறினார்.

நடந்துமுடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக 293 தொகுதிகளிலும், இந்தியா கூட்டணி 234 இடங்களிலும் பிற கட்சிகள் 18 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன. காங்கிரஸ் 99 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இந்திய அளவில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 400 இடங்களைத் தாண்டும் என்று பாஜக தலைவர்கள் கூறி வந்தனர். இருப்பினும்  தனிப்பெரும்பான்மை இல்லாததால் கூட்டணி கட்சிகளுடன் ஆட்சி அமைக்க பாஜக முடிவு செய்துள்ளது. அதேபோல் எதிர்க்கட்சி வரிசையில் அமர இந்தியா கூட்டணி முடிவு செய்துள்ளது

இதையடுத்து தேசிய ஜனநாயக கூட்டணியின் நாடாளுமன்ற குழு தலைவராக பிரதமர் நரேந்திர மோடியை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜநாத் சிங் முன்மொழிந்தார். அதை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வழிமொழிந்தார். இதனை அடுத்து அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் மோடி மோடி என கோஷம் எழுப்பி ஆதரவு தெரிவித்தனர். பின்னர் நாடாளுமன்ற குழு தலைவராக பிரதமர் மோடி தேர்ந்தெடுக்கப்பட்டார்.