தாயாரின் 100வது பிறந்தநாளையொட்டி, ஆசிபெற்ற பிரதமர் மோடி..

 
தாயாரின் 100வது பிறந்தநாளையொட்டி, ஆசிபெற்ற பிரதமர் மோடி..

தனது தாயாரின் 100வது பிறந்தநாளை ஒட்டி பிரதமர் மோடி அவரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

PM Modi

பிரதமர் மோடி 2 நாள் சுற்றுப்பயணமாக குஜராத் மாநிலத்திற்கு சென்றிருக்கிறார்.  அங்குள்ள வதோதராவில்  ரூ. 20 ஆயிரம் கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களை இன்று அவர் தொடங்கி வைக்கிறார். மேலும் 16 ஆயிரம் கோடி  ரூபாய் மதிப்பீட்டில் பல்வேறு ரயில்வே திட்டங்களையும் பிரதமர் மோடி நாட்டிற்கு அர்ப்பணிக்கிறார். அத்துடன் பிரதமரின் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள 1.38 லட்சம் வீடுகளையும் பிரதமர் மோடி இன்று  நாட்டிற்கு அர்ப்பணிக்க உள்ளதாகவும்,  பவகத் மலையில் புதுப்பிக்கப்பட்ட ஸ்ரீ காளிகா மாதா கோயிலையும்  திறந்து வைக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

modi

இந்த நிலையில் இன்று  பிரதமர் மோடியின் தாயார் ஹீரா பென்னின் நூறாவது பிறந்த நாள் ஆகும்.  100வது  அகவையில் அடியெடுத்து வைக்கும் தனது தாயாரின் பிறந்தநாளை ஒட்டி,   காந்திநகரில் உள்ள அவரது இல்லத்தில்  தயார் ஹீரா பென்னை நேரில் சந்தித்து பிரதமர் மோடி வாழ்த்து பெற்றார். இதனிடையே  காந்திநகர்  ராய்சான்  பகுதியில் உள்ள 80 மீட்டர் சாலைக்கு மோடியின் தாயார்  ஹீரா பென் பெயர் வைக்க முடிவு செய்யப்பட்டிருப்பதாக   அந்நகர மேயர்  ஹிதேஷ் மக்வான தெரிவித்திருக்கிறார்.