"உலகின் மிக மோசமான குற்றவாளியைக் கட்டிப்பிடித்த மோடி" - உக்ரைன் அதிபர் கடும் விமர்சனம்

 
t

பிரதமர் மோடியின் ரஷ்ய பயணம் குறித்து உக்ரைன் அதிபர் விளாடிமிர் செலன்ஸ்கி வருத்தம் தெரிவித்துள்ளார்.
 

tt

உக்ரைன் மீது ரஷ்யா நடத்திய தாக்குதல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் ஐந்து முக்கிய நகரங்களை குறி வைத்து ரஷ்யா அந்த தாக்குதலை நடத்தியுள்ளது. 40க்கும் மேற்பட்ட ஏவுகணைகள் மூலம் ரஷ்யா சரமாரியாக நடத்திய தாக்குதலில் அடுக்குமாடி குடியிருப்புகள், பொது கட்டமைப்புகள் சேதமடைந்துள்ளன. ரஷ்யாவின் கொடூரமான ஏவுகணைத் தாக்குதலின் விளைவாக 3 குழந்தைகள் உட்பட 37 பேர் உயிரிழந்துள்ளனர். 
 

tt

இதுதொடர்பாக உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி தனது சமூகவலைத்தள பக்கத்தில், ரஷ்யாவின் ஏவுகணை தாக்குதலால் 37 பேர் உயிரிழப்பு. 170 பேர் காயமடைந்துள்ளனர். அதே நாளில் உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாட்டின் தலைவர் ஒருவர், உலகின் மிகப்பெரிய குற்றவாளியை மாஸ்கோவில் கட்டியணைக்கிறார். அதை பார்க்கும்போது அமைதியை நிலைநாட்டுவதற்கான முயற்சி தோற்றதைப்போல ஒரு ஏமாற்றத்தை தருகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.