“நாளை முதல் மக்களின் சேமிப்பு அதிகரிக்கும்; விரும்பியதை எளிதாக வாங்கலாம்”- மோடி
ஜிஎஸ்டி சீர்திருத்தம் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை வேகப்படுத்தும் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.

இதுதொடர்பாக பிரதமர் மோடி பேசுகையில், “ஜிஎஸ்டிக்கு முன் மாநிலங்கள் இடையே சரக்குகளை பிற மாநிலங்களுக்கு கொண்டு செல்ல சிரமம் இருந்தது. சரக்கு போக்குவரத்தில் இருந்த தடைகளை நீக்கவே ஜிஎஸ்டி கொண்டுவரப்பட்டது. ஜிஎஸ்டி அமலாக்கம் இந்தியாவின் மிகப்பெரிய வரி சீர்த்திருத்தம. ஒரே நாடு ஒரே வரி என்ற கோடிக்கணக்கானோரின் கனவு நனவானது. 2 ஆம் தலமைமுறை ஜிஎஸ்டி சீர்த்திருத்தம் அனைத்து தரப்பினருக்கும் நன்மை உண்டாக்கும். உணவு, மருந்து, பல்வேறு வீட்டு உபயோகப் பொருட்களின் விலை நாளை முதல் குறையும். இந்திய பொருளாதாரத்தில் புதிய சகாப்தம் தொடங்குகிறது. 25 கோடி பேரை ஏழ்மையில் இருந்து மீட்டுள்ளோம். ஏழைகள், நடுத்தர வர்த்தகத்த்னர், மகளிர், விவசாயிகளுக்கு குறைந்த விலையில் பொருள் கிடைக்கும். ஜிஎஸ்டிக்கு முன்பு வரி வதிப்பு விகிதம் சிக்கலானதாக இருந்தது.
ஜிஎஸ்டியில் 5%, 18% வரி வரம்புகள் மட்டுமே பெரும்பாலான பொருட்கள் மீது வி்திக்கப்படும். வருமான வரியிலும் சலுகை, ஜிஎஸ்டியிலும் சலுகை அளித்துள்ளோம். ஜிஎஸ்டி சீர்த்திருத்தத்தால் சிறு கடைக்காரர்கூட பலனடைய முடியும். நாளை முதல் மக்களின் சேமிப்பு அதிகரிக்கும். விரும்பியதை எளிதாக வாங்கலாம். ஜிஎஸ்டி வரி குறைப்பால் கோடிக்கான குடும்பங்கள் மகிழ்ச்சி அடையும். மக்களின் பட்ஜெட் உயர உள்ளது. ஜிஎஸ்டி குறைப்பால் மக்களுக்கு ரூ.2.5 லட்சம் கோடி சேமிக்கப்படுகிறது.” என்றார்.


