அருணாச்சல பிரதேச மக்களுக்கு நன்றி தெரிவித்த பிரதமர் மோடி
அருணாச்சல பிரதேச மாநிலத்தின் வளர்ச்சிக்காக பாஜக இன்னும் அதிக வீரியத்துடன் பாடுபடும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
அருணாச்சல பிரதேசத்தில் மொத்தமுள்ள 60 தொகுதிகளில் பாஜக 45 இடங்களை கைப்பற்றி ஆட்சியை தக்க வைத்தது. தேசிய மக்கள் கட்சி ஒரு தொகுதியில் வெற்றி, 5 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. அருணாச்சலில் வெற்றி பெற 31 இடங்கள் தேவைப்படும் நிலையில், 45 தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்று உள்ளதால் மீண்டும் அங்கு பாஜக ஆட்சியை பிடித்துள்ளது. குறிப்பாக அருணாச்சலில் 10 பாஜக வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அருணாச்சல பிரதேசத்தில் காங்கிரஸ் ஒரே ஒரு தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. NPP கட்சி 6 இடங்களிலும், மற்ற கட்சிகள் 8 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.
Thank you Arunachal Pradesh! The people of this wonderful state have given an unequivocal mandate to politics of development. My gratitude to them for reposing their faith in @BJP4Arunachal yet again. Our Party will keep working with even greater vigour for the state’s growth.
— Narendra Modi (@narendramodi) June 2, 2024
பாஜகவுக்கு வாக்களித்து வெற்றி பெற வைத்த அருணாச்சல பிரதேச மக்களுக்கு நன்றி தெரிவித்துள்ள பிரதமர் மோடி, “அருணாச்சல பிரதேச மாநிலத்தின் வளர்ச்சிக்காக பாஜக இன்னும் அதிக வீரியத்துடன் பாடுபடும். மக்களுக்கு நன்றி! மாநிலத்தின் வளர்ச்சிக்காக உழைக்கும் பாஜகவிற்கு தெளிவான உத்தரவை வழங்கியுள்ளனர்” எனக் குறிப்பிட்டுள்ளார்.